ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் சைபர் பாதுகாப்புப் பயிற்சி 2024-ல் கலந்து கொண்டார்
2024 மே 22, அன்று நடைபெற்ற ‘சைபர் பாதுகாப்பு – 2024’ பயிற்சியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு, இந்தியாவின் இணைய பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். விரிவான சைபர் பாதுகாப்புப் பயிற்சி, சைபர் பாதுகாப்பு முகமையால் 2024 மே 20 தொடங்கி 24 வரை நடத்தப்படுகிறது. இது அனைத்து சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் இணையப் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதையும், அனைத்துப் பங்குதாரர்களிடையே…
வட இந்தியாவில் காற்று மாசு மற்றும் சுகாதார விளைவுகள் குறித்த அடிப்படை ஆராய்ச்சியை ஜோத்பூர் ஐஐடி வெளியிட்டுள்ளது
உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு கடுமையான சுகாதார தாக்கங்களுடன், காற்று மாசுபாடு ஒரு முக்கியமான உலகளாவிய சவாலாக உள்ளது. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியாக, ஜோத்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதழில் அடிப்படை ஆராய்ச்சியை வெளியிட்டுள்ளார். இதில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் வட இந்தியாவில் உள்ள துகள்களின் ஆதாரங்கள் மற்றும் கலவைக் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் காற்று மாசுபாடு நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர் சமூகங்கள் மற்றும் தொடர்புடையவர்களிடையே ஒத்துழைப்பும், குறிப்பாக தில்லி போன்ற மக்கள்தொகை நெருக்கம் கொண்ட நகர்ப்புறங்களில் சமூக மாற்றங்களும் தேவை என்று கட்டுரையின் ஆசிரியரும், இணைப் பேராசிரியருமான டாக்டர் தீபிகா பட்டு வலியுறுத்துகிறார். தூய்மையான எரிசக்தி ஆதாரங்களை ஊக்குவித்தல், எரிப்பு செயல்திறனை மேம்படுத்துதல் மற்றும் காலாவதியான, அதிக சுமை மற்றும் தகுதியற்ற வாகனங்களிலிருந்து வெளிவரும் மாசுவைத் தடுத்தல் ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த நிலையான முயற்சிகள் தேவை என்று அவர் கூறுகிறார். இணைப் பேராசிரியர் டாக்டர். தீபிகா பட்டு, ஐஐடி ஜோத்பூர் எதிர்கால சந்ததியினருக்கு பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஆதார அடிப்படையிலான கொள்கைகள் மற்றும் தலையீடுகளுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவுகளை தங்களுடைய ஆய்வு வழங்குவதாக அவர் தெரிவிக்கிறார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்…
கொச்சியில் நடைபெறும் 46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தில் அண்டார்டிகா சுற்றுலா குறித்த முதலாவது பணிக்குழு விவாதங்களுக்கு இந்தியா ஏற்பாடு செய்துள்ளது
46-வது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26-வது கூட்டத்தில் அண்டார்டிகாவில் சுற்றுலாவை ஒழுங்குபடுத்துவதில் கவனம் செலுத்துவது தொடர்பான விவாதங்களை நடத்துவதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க உள்ளது. புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள கோவாவின்…
டிபிஐஐடியின் சிமென்ட் மற்றும் கட்டிடப் பொருட்களுக்கான தேசிய கவுன்சிலில் இன்குபேஷன் மையம் திறக்கப்பட்டது
புதிய கண்டுபிடிப்புகள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் நாட்டின் ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழலில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வலுவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான நோக்கத்துடன் இந்திய அரசு 16 ஜனவரி 2016 அன்று ஸ்டார்ட்அப் இந்தியா முயற்சியைத் தொடங்கியது. நீடித்த முயற்சிகள் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது என்று…
மக்களவைக்கு நாளை நடைபெறவுள்ள 5-ம் கட்ட வாக்குப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன
மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு நாளை (20.05.2024) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறுகிறது.…
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்த கட்டமைப்புக்கான புத்தொழில் பெருவிழா நிகழ்ச்சியை புதுதில்லியில் நடத்தியது
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) இன்று (17.05.2024) புதுதில்லியில் டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்த கட்டமைப்புக்கான புத்தொழில் பெருவிழா (ஓஎன்டிசி ஸ்டார்ட்அப் மஹோத்சவ்) என்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்தியது. டிபிஐஐடி-ன் இரண்டு முதன்மை முயற்சிகளான ஸ்டார்ட்அப் இந்தியா முன்முயற்சி மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்த கட்டமைப்பு (ஓஎன்டிசி) ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றை…
சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம், தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து “தரப்படுத்தல் இடைவெளியை நிரப்புதல்” குறித்த இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது
2024 மே 15 மற்றும் 16 தேதிகளில் காசியாபாத்தில் “தொலைத் தொடர்புத் துறையில் தரப்படுத்தல் இடைவெளியைக் குறைத்தல்” என்பது தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற்றது. புதுதில்லியில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) பகுதி அலுவலகம், மத்திய தொலைத்தொடர்புத் துறையின்…
ஆன்லைன் போலி மதிப்புரைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பது குறித்து பங்குதாரர்களின் ஆலோசனை நிகழ்வுக்கு நுகர்வோர் நலத்துறை ஏற்பாடு செய்திருந்தது
ஆன்லைன் போலி மதிப்புரைகளிலிருந்து நுகர்வோர் நலனைப் பாதுகாப்பது குறித்து நுகர்வோர் நலத்துறை இன்று பங்குதாரர்களின் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. நுகர்வோர் நலத்துறை செயலாளர் திருமதி நிதி கரே கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தேசிய நுகர்வோர் உதவி எண்ணில் பதிவு செய்யப்பட்ட இ-வணிகம் தொடர்பான நுகர்வோர் குறைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2018-ல் 95,270…
“சங்கம் முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான” முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது
“சங்கம் முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான” முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024, பிப்ரவரி 15 அன்று தொடங்கப்பட்ட சங்கம் முன்னெடுப்பு, இயற்பியல் சூழல்களின் துல்லியமான, மாறும் மாதிரிகளை உருவாக்க டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புதுமையான அணுகுமுறை நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. சங்க முன்னெடுப்புக்காக தொழில்துறை பிரபலங்கள், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான புத்தொழில் நிறுவனங்கள், முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட 112 நிறுவனங்கள் மற்றும் 32 தனிநபர்கள் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை https://sangam.sancharsaathi.gov.in/selected-participants என்ற இணையதளத்தில் காணலாம்.
வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.
தமிழ்நாடு வேலைவாய்ப்புக்கான தொழிலாளர் மேலாண்மையில் பட்ட, பட்ட மேற்படிப்பு மற்றும் முதுநிலை பட்டய படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் படிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பார்க்கவும்.