Wed. Dec 25th, 2024

“சங்கம்  முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான” முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை பெருமையுடன் அறிவித்துள்ளது. 2024, பிப்ரவரி 15 அன்று தொடங்கப்பட்ட சங்கம் முன்னெடுப்பு, இயற்பியல் சூழல்களின் துல்லியமான, மாறும் மாதிரிகளை உருவாக்க டிஜிட்டல் இரட்டை தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதன் மூலம் உள்கட்டமைப்பு திட்டமிடல் மற்றும் வடிவமைப்பில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தப் புதுமையான அணுகுமுறை நிகழ்நேர நுண்ணறிவு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளை செயல்படுத்துகிறது. உள்கட்டமைப்பு திட்டங்களின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.

சங்க முன்னெடுப்புக்காக தொழில்துறை பிரபலங்கள், புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான புத்தொழில் நிறுவனங்கள், முன்னணி கல்வி நிறுவனங்கள் உட்பட 112 நிறுவனங்கள் மற்றும் 32 தனிநபர்கள் இதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த விவரங்களை https://sangam.sancharsaathi.gov.in/selected-participants என்ற இணையதளத்தில் காணலாம்.


“சங்கம் முன்னெடுப்பு: செயற்கை நுண்ணறிவு சார்ந்த உள்கட்டமைப்பு மாற்றத்தை நோக்கிய நடவடிக்கைக்கான” முதற்கட்ட பங்கேற்பாளர்களை தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta