ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் (M&E) தொழில்துறைக்கான முதன்மையான உலகளாவிய மின்-சந்தையான வேவ்ஸ் பஜார் (WAVES Bazaar), மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் 2025 மே 1 முதல் 4 வரை நடைபெறும் அதன் தொடக்க பதிப்பானது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. வேவ்ஸ் 2025-ன் முக்கிய அங்கமாக திரைப்படம், தொலைக்காட்சி, ஏவிஜிசி (அனிமேஷன், விஎஃப்எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைத்து, ஒத்துழைப்பு, உள்ளடக்கக் காட்சிப்படுத்தல், வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் இணையற்ற வாய்ப்புகளை வழங்க உள்ளது. இந்தியாவை உலகளாவிய உள்ளடக்க மையமாக நிறுவுவதற்கான லட்சியப் பார்வையுடன், வேவ்ஸ் பஜார் செயல்படும். இது அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை எளிதாக்கி எல்லை தாண்டிய கூட்டுறவுகளை உருவாக்கும். பார்வை அறையும் சந்தைத் திரையிடல்களும்: வேவ்ஸ் பஜார் திரைப்படங்கள், தொடர்கள், ஏவிஜிசி திட்டங்களின் தொகுக்கப்பட்ட திரையிடல்களை வழங்கும். வாங்குபவர்கள், விற்பனை முகவர்கள், விநியோகஸ்தர்களுக்கு புதிய உள்ளடக்கத்திற்கான பிரத்யேக அணுகலை வழங்கும். பார்வை அறை தொழில் வல்லுநர்களுக்கு புதிய தலைப்புகளை ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு பிரத்யேகத் தளத்தை வழங்கும். அதே நேரத்தில் சந்தைத் திரையிடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும். உள்ளடக்க விநியோகம், உரிம ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும். வாங்குபவர் – விற்பவர் கூட்டங்கள்: ஃபிக்கி பிரேம்ஸ் (FICCI Frames) உள்ளடக்க சந்தையுடன் இணைந்து, வேவ்ஸ் பஜார் ஒரு கட்டமைக்கப்பட்ட வாங்குபவர் – விற்பனையாளர் பிரிவை வழங்கும். இது தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோக்கள், ஒளிபரப்பாளர்கள், தளங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடையே சந்திப்புகளை ஏற்படுத்தும். பிட்ச்ரூம்: யோசனைகள் முதலீட்டாளர்களைச் சந்திக்கும் இடம் படைப்பாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளடக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு உயர் ஆற்றல் தளத்தை இந்த பிட்ச் ரூம் வழங்கும். வளர்ந்து வரும் திறமையாளர்களையும் புதுமையான படைப்பாற்றல் திட்டங்களையும் கண்டறிய இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிட்ச்ரூம் புதிய உள்ளடக்க முயற்சிகள், சாத்தியமான கூட்டுத் தயாரிப்புகளுக்கான தளமாகவும் செயல்படும். வேவ்ஸ் பஜாருக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு: வேவ்ஸ் பஜாரின் உள்ளடக்க வர்த்தகத்தை உருமாற்றும் திறனுக்காக முக்கிய தொழில்துறை பிரதிநிதிகள் வேவ்ஸ் பஜாரைப் பாராட்டியுள்ளனர். “வேவ்ஸ் பஜாரில் பல பிரிவுகளில் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பனோரமா ஸ்டுடியோவின் தலைமை வணிக அதிகாரி திரு முரளிதர் சத்வானியும் பனோரமா ஸ்டுடியோவின் திரைப்பட கையகப்படுத்துதல் பிரிவுத் தலைவர் திரு ரஜத் கோஸ்வாமியும் தெரிவித்தனர். உலகளாவிய உள்ளடக்கம், உத்திசார் கூட்டணி ஆகியவற்றுக்கான நுழைவாயில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தளமாக வேவ்ஸ் பஜார் உள்ளது. புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிதல், கூட்டு ஒத்துழைப்புகளை உருவாக்குதல், விநியோகம், கூட்டுத் தயாரிப்பு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஒரு செல்வாக்குமிக்க தளத்தை இது வழங்குகிறது.