Thu. Apr 3rd, 2025

Category: தமிழ்நாடு

தமிழ்நாடு

அனைத்து தொகுதிகளிலும் அதிவேக இணைய இணைப்பு

நாட்டின் கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 4G மொபைல் கோபுரங்களை நிறுவுவதன் மூலம் இணைய அடிப்படையிலான தொலைத்தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்காக, டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் அரசாங்கம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் கவரேஜை வழங்குவதை…

வேவ்ஸ் பஜார் பிரத்யேக கண்காட்சிகள் மற்றும் உத்தி சார் ஒத்துழைப்புகளுடன் உலகளாவிய தளத்தை விரிவுபடுத்துகிறது

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் (M&E) தொழில்துறைக்கான முதன்மையான உலகளாவிய மின்-சந்தையான வேவ்ஸ் பஜார் (WAVES Bazaar), மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் 2025 மே 1 முதல் 4 வரை நடைபெறும் அதன் தொடக்க பதிப்பானது சக்திவாய்ந்த தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது. வேவ்ஸ் 2025-ன் முக்கிய அங்கமாக திரைப்படம், தொலைக்காட்சி, ஏவிஜிசி (அனிமேஷன், விஎஃப்எக்ஸ், கேமிங், காமிக்ஸ்) துறைகளைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்களை ஒன்றிணைத்து, ஒத்துழைப்பு, உள்ளடக்கக் காட்சிப்படுத்தல், வணிக விரிவாக்கம் ஆகியவற்றில் இணையற்ற வாய்ப்புகளை வழங்க உள்ளது. இந்தியாவை உலகளாவிய உள்ளடக்க மையமாக நிறுவுவதற்கான லட்சியப் பார்வையுடன், வேவ்ஸ் பஜார் செயல்படும். இது அர்த்தமுள்ள ஒத்துழைப்புகளை எளிதாக்கி எல்லை தாண்டிய கூட்டுறவுகளை உருவாக்கும். பார்வை அறையும் சந்தைத் திரையிடல்களும்: வேவ்ஸ் பஜார் திரைப்படங்கள், தொடர்கள், ஏவிஜிசி திட்டங்களின் தொகுக்கப்பட்ட திரையிடல்களை வழங்கும். வாங்குபவர்கள், விற்பனை முகவர்கள், விநியோகஸ்தர்களுக்கு புதிய உள்ளடக்கத்திற்கான பிரத்யேக அணுகலை வழங்கும். பார்வை அறை தொழில் வல்லுநர்களுக்கு புதிய தலைப்புகளை ஆராய்ந்து பெறுவதற்கான ஒரு பிரத்யேகத் தளத்தை வழங்கும். அதே நேரத்தில் சந்தைத் திரையிடல்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களை உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும். உள்ளடக்க விநியோகம், உரிம ஒப்பந்தங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கும். வாங்குபவர் – விற்பவர் கூட்டங்கள்: ஃபிக்கி பிரேம்ஸ் (FICCI Frames) உள்ளடக்க சந்தையுடன் இணைந்து, வேவ்ஸ் பஜார் ஒரு கட்டமைக்கப்பட்ட வாங்குபவர் – விற்பனையாளர் பிரிவை வழங்கும். இது தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோக்கள், ஒளிபரப்பாளர்கள், தளங்கள் உள்ளிட்ட முக்கிய பங்குதாரர்களிடையே சந்திப்புகளை ஏற்படுத்தும். பிட்ச்ரூம்: யோசனைகள் முதலீட்டாளர்களைச் சந்திக்கும் இடம் படைப்பாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளடக்க கண்டுபிடிப்பாளர்களுக்கு உயர் ஆற்றல் தளத்தை இந்த பிட்ச் ரூம் வழங்கும். வளர்ந்து வரும் திறமையாளர்களையும் புதுமையான படைப்பாற்றல் திட்டங்களையும் கண்டறிய இது வடிவமைக்கப்பட்டுள்ளது. பிட்ச்ரூம் புதிய உள்ளடக்க முயற்சிகள், சாத்தியமான கூட்டுத் தயாரிப்புகளுக்கான தளமாகவும் செயல்படும். வேவ்ஸ் பஜாருக்கு தொழில்துறை தலைவர்கள் பாராட்டு: வேவ்ஸ் பஜாரின் உள்ளடக்க வர்த்தகத்தை உருமாற்றும் திறனுக்காக முக்கிய தொழில்துறை பிரதிநிதிகள் வேவ்ஸ் பஜாரைப் பாராட்டியுள்ளனர். “வேவ்ஸ் பஜாரில் பல பிரிவுகளில் பங்கேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று பனோரமா ஸ்டுடியோவின் தலைமை வணிக அதிகாரி திரு முரளிதர் சத்வானியும்   பனோரமா ஸ்டுடியோவின் திரைப்பட கையகப்படுத்துதல் பிரிவுத் தலைவர் திரு ரஜத் கோஸ்வாமியும் தெரிவித்தனர். உலகளாவிய உள்ளடக்கம், உத்திசார் கூட்டணி ஆகியவற்றுக்கான நுழைவாயில் உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் தளமாக வேவ்ஸ் பஜார் உள்ளது. புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிதல், கூட்டு ஒத்துழைப்புகளை உருவாக்குதல், விநியோகம், கூட்டுத் தயாரிப்பு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றுக்கு ஒரு செல்வாக்குமிக்க தளத்தை இது வழங்குகிறது.

அணுசக்தி மூலம் நிலையான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

நிலைத்தன்மையிலும் எரிசக்தியில் தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்திலும் அணுசக்தியின் முக்கிய பங்கு குறித்து மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் ஆழ்ந்த கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில்…

சைபர் குற்றங்களுக்கு எதிராக உள்கட்டமைப்பு மற்றும் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை

நாட்டில் சைபர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள மத்திய அரசு சட்ட, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக கொள்கை அளவிலான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சைபர் குற்றங்களைத் தடுக்க நாடு தழுவிய ஒருங்கிணைந்த அமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது. இதன்படி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின்…

கூட்டுறவு மாதிரியை அடிப்படையாகக் கொண்ட ஒரு டாக்ஸி சேவை விரைவில் தொடங்கப்படும்

கூட்டுறவு டாக்ஸி சேவை இரு சக்கர வாகனங்கள், டாக்சிகள், ரிக்‌ஷாக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்ய அனுமதிக்கும் சஹகர் சே சம்ரிதி கொள்கைகளின் அடிப்படையில், விருப்பமுள்ள டாக்ஸி ஓட்டுநர்களால் ஒரு கூட்டுறவு டாக்ஸி சேவை உருவாக்கப்படும், மேலும் நிர்வாகம்…

01.01.2025 முதல் மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதல் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், விலைவாசி உயர்வை ஈடுசெய்யும் வகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி மற்றும்  ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி நிவாரணத்தொகை ஆகியவற்றின் கூடுதல் தவணையை 01.01.2025 முதல் விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. அகவிலைப்படி…

நாடு முழுவதும் கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவிக்க அதிவேக அகண்ட அலைவரிசை இணைப்புகள்

தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்படும் டிஜிட்டல் இந்தியா நிதியம் நாடு முழுவதிலும் உள்ள கிராமப்புறங்களுக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பதற்காக வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. பாரத்நெட் திட்டத்தின் கீழ் அதிவேக அகண்ட அலைவரிசை இணைப்பு…

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக கொள்முதல் செய்யப்படவில்லையென்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்: மத்திய வேளாண் அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான்

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் கூறினார். குறைந்தபட்ச ஆதரவு விலையில் விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு…

தேர்தல் ஆணையம் முதன்முறையாக 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கு இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் பயிற்சியைத் தொடங்கியது

புதுதில்லியில் உள்ள இந்திய சர்வதேச ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை நிறுவனத்தில் தேர்தல் ஆணையர் டாக்டர் விவேக் ஜோஷியுடன் இணைந்து வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கான (பிஎல்ஓ) முதலாவது பயிற்சியை தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் இன்று தொடங்கி வைத்தார்.…

வலுவான முன்முயற்சிகள், நிதி ஆதரவுடன் புத்தொழில் சூழல் அமைப்பை அரசு வலுப்படுத்துகிறது

புத்தாக்கக் கண்டுபிடிப்புகள், புதிய தொழில்கள் தொடங்குதல் மற்றும் நாட்டின் புத்தொழில் சூழலில் முதலீடுகளை ஊக்குவித்தல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான வலுவான சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் அரசு 2016 ஜனவரி 16 அன்று புத்தொழில் இந்தியா முன்முயற்சியைத் தொடங்கியது. புத்தொழில் இந்தியா முன்முயற்சியின் கீழ்,…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta