2024 மே 22, அன்று நடைபெற்ற ‘சைபர் பாதுகாப்பு – 2024’ பயிற்சியில் ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் கலந்து கொண்டு, இந்தியாவின் இணைய பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
விரிவான சைபர் பாதுகாப்புப் பயிற்சி, சைபர் பாதுகாப்பு முகமையால் 2024 மே 20 தொடங்கி 24 வரை நடத்தப்படுகிறது. இது அனைத்து சைபர் பாதுகாப்பு அமைப்புகளின் இணையப் பாதுகாப்புத் திறனை மேலும் மேம்படுத்துவதையும், அனைத்துப் பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது பல்வேறு ராணுவ மற்றும் முக்கியமான தேசிய அமைப்புகளின் பங்கேற்பாளர்களிடையே ஒத்துழைப்பையும் ஒருங்கிணைப்பையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
சைபர் துறையில் உள்ள அனைத்துப் பங்குதாரர்களும் கூட்டாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை ராணுவத் தலைமைத் தளபதி எடுத்துரைத்த்துடன் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களை சமாளிக்க ஒரு கூட்டுச் சூழலை வளர்ப்பதற்கான முன்முயற்சியைப் பாராட்டினார். இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்வதில் பங்கேற்பாளர்கள் மற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்பையும் முயற்சிகளையும் கூட அவர் பாராட்டினார்.
சைபர் பாதுகாப்புபு பயிற்சி – 2024 பங்கேற்பாளர்களின் இணையப் பாதுகாப்பு திறன்கள், நுட்பங்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.