Fri. Dec 27th, 2024

2024 மே 15 மற்றும் 16 தேதிகளில் காசியாபாத்தில் “தொலைத் தொடர்புத் துறையில் தரப்படுத்தல் இடைவெளியைக் குறைத்தல்” என்பது தொடர்பான இரண்டு நாள் பயிலரங்கு நடைபெற்றது.

புதுதில்லியில் உள்ள சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) பகுதி அலுவலகம், மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் காசியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து (NTIPRIT) இந்த பயிலரங்கை நடத்தியது.

இந்த நிகழ்ச்சியை மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணைய தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் திருமதி மது அரோரா தொடங்கி வைத்தார். தொலைத் தொடர்புத் துறையின் களப் பிரிவுகள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்), பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), தொலைத்தொடர்பு பொறியியல் மையம் மற்றும் தொலைத் தொடர்புத் துறை புத்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகள் இந்தப் பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல், உலகளாவிய சிறந்த செயல்பாடுகளை உறுதி செய்தல், பாதுகாப்பை மேம்படுத்துதல், ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.

தொலைத்தொடர்புத் துறையின் டிஜிட்டல் தொலைத்தொடர்பு ஆணைய தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் மது அரோரா தமது தொடக்க உரையில், டிஜிட்டல் சமநிலை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைவதில் தரப்படுத்தலின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார். என்.டி.ஐ.பி.ஆர்.ஐ.டி.யின் தலைமை இயக்குநர் திரு. தேப் குமார் சக்ரபர்த்தி, பல்வேறு தொழில்களில் இயங்குதன்மை, புதுமை மற்றும் தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்வதில் உலகத் தரங்களின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.


சர்வதேச தொலைத் தொடர்பு சங்கத்தின் பகுதி அலுவலகம், தொலைத் தொடர்புத் துறையுடன் இணைந்து “தரப்படுத்தல் இடைவெளியை நிரப்புதல்” குறித்த இரண்டு நாள் பயிலரங்கை நடத்தியது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta