Tue. Jan 21st, 2025

முதன்மை செய்தி

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் திட்டத்தின் 10-ம் ஆண்டு விழா: மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கொண்டாட உள்ளது
அமிர்த உத்யான் பிப்ரவரி 2 முதல் பொதுமக்களுக்காக திறக்கப்படுகிறது
ஸ்பெக்ட்ரம் குறித்த பயிலரங்கத்தை டிராய் தலைவர் தொடங்கி வைத்தார்
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தி்ன் 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரை

விளம்பரம்

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வெறும் நிறுவனமாகப் பார்க்கக் கூடாது எனவும் அவை மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றன எனவும் மத்திய தொழில் – வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். அவை  லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன என்றும் தேச நிர்மாணத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார். புதுதில்லியில் நடைபெற்ற 10 வது இந்திய சர்வதேச குறு,சிறு, நடுத்தர நிறுவன புத்தொழில் கண்காட்சி, உச்சி மாநாடு 2024-ல் அவர் பங்கேற்றுப் பேசினார். புதுமையான சிந்தனைகளும், புதிய வழிகளும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்முனைவோரின் அடையாளமாக உள்ளன என்று திரு கோயல் கூறினார். பெரிய தொழில்கள் ஆயிரக்கணக்கான, குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கியது எனவும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்  இல்லாமல் பெரிய நிறுவனங்கள் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் சுற்றுலா, உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் துறையின் வளர்ச்சி நாட்டிற்கு இன்றியமையாதது என்று அவர் கூறினார். 140 கோடி நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தேச நிர்மாணத்தில் பங்களிக்கும்போது, 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும், அனைவருக்கும் வளத்தை நம்மால் உறுதி செய்ய முடியும் என்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCO) மூலம் அரசு குறு, சிறு, நடுத்தர நிறுவன துறைக்கு ஆதரவளிக்கிறது என்ற உண்மையை திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பங்களை குறு, சிறு தொழில்முனைவோருக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை- சிஎஸ்ஐஆர், எல்யுபி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அறிவியல் – தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR-சிஎஸ்ஐஆர்) லகு உத்யோக் பாரதியும் (LUB) சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் 21 ஆகஸ்ட் 2024 அன்று குறு, சிறு தொழில்முனைவோருக்கு சிஎஸ்ஐஆர் தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. லகு உத்யோக் பாரதி என்பது 1994 முதல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட குறு  சிறு தொழில்களுக்கான அகில இந்திய அமைப்பாக திகழ்கிறது. இந்தியாவின் 27 மாநிலங்களில் 575 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 51000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனமாகும் இது. இந்த…

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் தபால் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இமாச்சல பிரதேச மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மாநில அளவிலான பயிற்சியை நடத்தியது

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, மற்றும் இமாச்சலப் பிரதேச அரசு ஆகியவை இணைந்து மாநில மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மென்பொருள் (மொபைல் மற்றும் வலை பயன்பாடு / டாஷ்போர்டு) மற்றும் இனங்கள் குறித்த 21வது கால்நடை…

மின்னணு வணிகத்தின் வளர்ச்சி மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

மின்னணு வணிகத்தின் வளர்ச்சி குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பஹ்லே இந்தியா அறக்கட்டளையின் ‘இந்தியாவில் வேலைவாய்ப்பு…

கடந்த ஓராண்டில் வருடத்தில் 7.3 கோடி இணைய சந்தாதாரர்கள் மற்றும் 7.7 கோடி பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர்

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையின்படி, 2023-2024 நிதியாண்டில் இந்திய தொலைத் தொடர்புத் துறை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த அறிக்கை, பல்வேறு சேவைகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி போக்குகள் மற்றும் முக்கிய அளவுருக்களை எடுத்துக்காட்டுகிறது. சேவை வழங்குவோரால் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி மார்ச் 2023 இறுதியில் 84.51%-லிருந்து…

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் அகமதாபாதில் 188 அகதி சகோதர-சகோதரிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வழங்கினார்

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) கீழ் 188 அகதி சகோதர-சகோதரிகளுக்கு குடியுரிமை சான்றிதழ்களை மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத்துறை  அமைச்சருமான திரு அமித் ஷா இன்று வழங்கினார். குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் உட்பட பல பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அமித் ஷா தமது உரையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டில் குடியேறியுள்ள லட்சக்கணக்கான   மக்களுக்கு குடியுரிமை வழங்குவது மட்டுமல்ல, லட்சக்கணக்கான அகதிகளுக்கு நீதி மற்றும் உரிமைகளை வழங்குவதாகும். முந்தைய அரசுகளின் திருப்திப்படுத்தும் கொள்கையின் காரணமாக, 1947 முதல் 2014 வரை நாட்டில் தஞ்சம் புகுந்த மக்களுக்கு அவர்களின் உரிமைகளும் நீதியும் கிடைக்கவில்லை என்றார். இந்த மக்கள் அண்டை நாடுகளில் மட்டுமல்ல, இங்கேயும் துயரங்களை சகித்துக் கொள்ள வேண்டியிருந்தது என்று அவர் கூறினார். இந்த லட்சக்கணக்கான மக்கள் மூன்று தலைமுறைகளாக நீதிக்காக ஏங்கினர், ஆனால் எதிர்க்கட்சிகளின் திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாக, அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று திரு ஷா கூறினார். பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்த லட்சக்கணக்கான மக்களுக்கு நீதி வழங்கியுள்ளார் என்று அவர் கூறினார். மக்களுக்காகத்தான் சட்டம் , சட்டத்திற்காக மக்கள் இல்லை  என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று நாங்கள் 2014-ல் உறுதியளித்தோம், 2019-ல் மோடி அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது என்று அவர் கூறினார். இந்த சட்டத்தின் மூலம், நீதி கிடைக்காத கோடிக்கணக்கான இந்துக்கள், சமணர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள் நீதி பெறத் தொடங்கினர் என்று அவர் கூறினார். இந்த சட்டம் 2019-ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகும் இது முஸ்லிம்களின் குடியுரிமையைப் பறிக்கும் என்று கூறப்பட்டது. ஆனால்  யாருடைய குடியுரிமையையும் பறிக்க இந்தச் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை என்றும், இது குடியுரிமை வழங்குவதற்கான சட்டம் என்றும் மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தினார். நமது சொந்த நாட்டு மக்கள் தங்களின் சொந்த நாட்டிலேயே ஆதரவற்ற நிலையில் வாழ்கிறார்கள். இதை விட துரதிர்ஷ்டவசமானதும் முரண்பாடானதும் என்ன இருக்க முடியும்? திருப்திப்படுத்தும் கொள்கை காரணமாக பல ஆண்டுகளாக செய்ய முடியாததை பிரதமர் மோடி செய்து 2019-ல் இந்த சட்டத்தை கொண்டு வந்தார் என்று திரு ஷா கூறினார். 2019 ஆம் ஆண்டில் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், நாட்டில்  சிறுபான்மையினர் தூண்டப்பட்டதால் கலவரங்கள் ஏற்பட்டு,இந்தக் குடும்பங்களுக்கு 2024 வரை குடியுரிமை கிடைக்கவில்லை என்று திரு அமித் ஷா கூறினார். சிஏஏ குறித்து நாடு முழுவதும் வதந்திகள் பரப்பப்பட்டன. இந்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்கவில்லை, இது இந்து, சமண, சீக்கிய, பௌத்த அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதற்கான சட்டமாகும். இன்றும் சில மாநில அரசுகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன என்று திரு அமித் ஷா கூறினார். நாடு முழுவதும் உள்ள அகதிகள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க தயங்க வேண்டாம் என்றும், இது அவர்களின் வேலைகள், வீடுகள் போன்றவற்றை முன்பு போலவே வைத்திருக்கும் என்றும் உள்துறை அமைச்சர் தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் உங்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும், ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம் என்று நாடு முழுவதும் உள்ள அகதிகளுக்கு திரு அமித் ஷா வேண்டுகோள் விடுத்தார். சிறுபான்மையினரை தவறாக வழிநடத்துபவர்கள் உங்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சட்டத்தைக் கொண்டுவர எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை என்றும், ஆனால் இப்போது குறைந்தபட்சம் அதை அமல்படுத்துவதில் மோடி அரசுக்கு அவர்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் திரு ஷா கூறினார். மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046432

இந்திய உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை சரி செய்வதற்கான திட்டத்தை இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தொடங்கியது

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்  ஆகஸ்ட் 18, 2024 அன்று புதுதில்லியில் உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த அதிகரித்து வரும் கவலையை சமாளிக்க ஒரு புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சர்க்கரை, உப்பு போன்ற பொதுவான உணவுப் பொருட்களில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை  உணவு மற்றும் வேளாண் அமைப்பின் சமீபத்திய அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மைக்ரோபிளாஸ்டிக்கின் உலகளாவிய பரவலை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டும் அதே வேளையில், குறிப்பாக இந்திய சூழலில், மனித ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் வலுவான தரவுகளின் அவசியத்தையும்  வலியுறுத்துகிறது. நாட்டின் உணவு பாதுகாப்பு ஒழுங்குமுறையாளராக, இந்திய நுகர்வோருக்கு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உறுதிபூண்டுள்ளது. உலகளாவிய ஆய்வுகள் பல்வேறு உணவுகளில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பதை எடுத்துக்காட்டினாலும், இந்தியாவுக்கென குறிப்பிட்ட நம்பகமான தரவை உருவாக்க வேண்டியது அவசியமாகும். இந்தத் திட்டம் இந்திய உணவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவைப் புரிந்துகொள்ள உதவும். பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க பயனுள்ள விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு தரங்களை உருவாக்க வழிகாட்டும். இந்தத் திட்டத்தின் கண்டுபிடிப்புகள் ஒழுங்குமுறை நடவடிக்கைகளை அறிவிப்பது மட்டுமின்றி, மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு குறித்த உலகளாவிய புரிதலுக்கும் பங்களிக்கும்.  இந்த சுற்றுச்சூழல் சவாலை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சியின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்திய ஆராய்ச்சியை மாற்றும்.

உள்நாட்டில் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ள பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்- தொழில், வர்த்தகத் துறையினருக்கு குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்

பொருளாதார தேசியவாதத்தை தழுவுமாறு மக்களை  குடியரசு துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர் கேட்டுக் கொண்டுள்ளார்.  தவிர்க்க வாய்ப்புள்ள இறக்குமதிப் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து அவற்றின் உள்ளூர் உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்குமாறு தொழில் வர்த்தகத் துறையினருக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். ஆந்திர மாநிலம் வெங்கடாசலத்தில் உள்ள ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையில் நடைபெற்ற 23-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு ஜக்தீப் தன்கர், சுதேசியின் ஒரு அம்சமாக பொருளாதார தேசியவாதம் என்ற கருத்தை வலியுறுத்தினார். அந்நியச் செலாவணி வெளியேற்றம், இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் இழப்பு உள்ளிட்டவை, தேவையற்ற இறக்குமதிகளால் ஏற்படும் எதிர்மறைத் தாக்கங்கள் என அவர் எடுத்துரைத்தார். உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்த பிரச்சினையைத் தீர்க்குமாறு அவர் தொழில்துறையினருக்கு வேண்டுகோள் விடுத்தார். இது இந்திய தொழிலாளர்களுக்கு வேலை வழங்குவதோடு தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் என அவர் குறிப்பிட்டார். இயற்கை வளங்களை உகந்த முறையில் பயன்படுத்துவதற்கான தேவையை அவர் சுட்டிக் காட்டினார். நிதி அதிகாரத்தை விட தேவையின் அடிப்படையில் வளங்களைப் பயன்படுத்துமாறு மக்களை அவர் வலியுறுத்தினார். பொறுப்பற்ற செலவினங்கள் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வை பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார். பணத்தின் சக்தியை வைத்து தேவையில்லாமல் செலவு செய்தால், எதிர்கால சந்ததியினருக்கு அது சிக்கலை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார். அரசியல், சுய மற்றும் பொருளாதார நலன்களை விட நாட்டின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த திரு ஜக்தீப் தன்கர், அனைவரது மனநிலையிலும் இந்த மாற்றம் எட்டப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தேச ஒற்றுமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும் உறுதியான நடவடிக்கைகளின் அவசரத் தேவையையும்  எடுத்துரைத்தார். முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு மீதான தமது ஆழ்ந்த மரியாதையை வெளிப்படுத்திய குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜக்தீப் தன்கர், தேசத்தின் நலனுக்காக திரு வெங்கையா நாயுடுவின் அர்ப்பணிப்பை எடுத்துரைத்தார். அவர் தொடங்கிய இந்த அறக்கட்டளை பல நல்ல பணிகளைச் செய்து வருவதாகத் திரு ஜக்தீப் தன்கர் பாராட்டுத் தெரிவித்தார்.

எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கான இ-ஏல நிகழ்வும் கடனுதவி நிகழ்வும் ராஞ்சியில் நடைபெற்றன

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள துபுதானா தொழிற்சாலை பகுதியில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கான இ-ஏல நிகழ்வையும், கடனுதவி நிகழ்வையும் தேசிய எஸ்சி,எஸ்டி மைய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அரசு இ-சந்தை, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சியில்…

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta