
ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள துபுதானா தொழிற்சாலை பகுதியில் எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கான இ-ஏல நிகழ்வையும், கடனுதவி நிகழ்வையும் தேசிய எஸ்சி,எஸ்டி மைய அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது. அரசு இ-சந்தை, எச்டிஎப்சி வங்கி ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தேசிய எஸ்சி,எஸ்டி மைய அலுவலகத்தின் ராஞ்சி பிரிவு மேலாளர் திருமதி கிரண் மரியா திரு, இந்தத் திட்டம் குறித்து விவரித்தார். வங்கி அதிகாரி திரு எஸ்கே சௌத்ரி, வங்கியிலிருந்து கடன் பெறுவதற்கு தேவைப்படும் ஆவணங்கள், நடைமுறைகள் பற்றி விவரித்தார். அரசு இ-சந்தையில் பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள், பதிவு செய்வதற்கான நடைமுறைகள் பற்றி தேசிய எஸ்சி,எஸ்டி மைய அலுவலகத்தின் இ-ஏலப்பிரிவு அலுவலர் திரு விவேகானந்த் எடுத்துரைத்தார்.
இந்த நிகழ்வுகளில் பங்கேற்றவர்களின் கேள்விகளுக்கு பிரதிநிதிகள் பதில் அளித்தனர்.