Tue. Dec 24th, 2024

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது. பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள புதிய அலகுகளை அஞ்சல் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் நேரடியாக சரிபார்ப்பு செய்வார்கள். இந்த நேரடி சரிபார்ப்புக்கு அஞ்சல் துறை ஊழியர்களுக்கு காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பயிற்சி அளிக்கும்.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு வாத்சல்ய சக்சேனா, குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சக இணைச் செயலாளர் திரு விபுல் கோயல், அஞ்சல் துறை பொது மேலாளர் திருமதி மனிஷா பன்சால் பாதல் முன்னிலையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அஞ்சல் துறை சார்பில் துணை பொது மேலாளர் டாக்டர் அமன்ப்ரீத் சிங், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் சார்பில் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்ட துணை தலைமை நிர்வாக அதிகாரி திரு ரஞ்சன் பாபு ஆகியோர் கையெழுத்திட்டனர். இதன் மூலம் ஊரகப் பகுதிகளில் செயல்படும் 1,39,067 அஞ்சலகங்கள் உட்பட நாடு முழுவதும் உள்ள 1,65,000 அஞ்சலக சேவைகளால் காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் பயனடையும்.

இரண்டு அரசு துறைகளுக்கு இடையே பணிக் கலாச்சார ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத் தலைவர் திரு மனோஜ் குமார் தெரிவித்தார். சுதந்திர இந்திய வரலாற்றில் முதன் முறையாக காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் ஆண்டு வருவாய் 1,55,000 கோடியை தாண்டியுள்ளது என்றும், முதல் முறையாக 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் இந்தத் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பை காணவும் – https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2047302


காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் தபால் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta