குடியரசுத் தலைவர் மாளிகையின் அமிர்த உத்யான் என்னும் பூந்தோட்டம் 2025 பிப்ரவரி 2 முதல் மார்ச் 30 வரை பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்படும். பராமரிப்பு நாட்களான திங்கட்கிழமை தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் தோட்டத்துக்குச் செல்லலாம். பிப்ரவரி 5 (தில்லி சட்டமன்றத்திற்கான வாக்குப்பதிவு காரணமாக), பிப்ரவரி 20 மற்றும் 21 (ராஷ்டிரபதி பவனில் பார்வையாளர்கள் மாநாடு காரணமாக), மார்ச் 14 (ஹோலி பண்டிகையை முன்னிட்டு) ஆகிய நாட்களில் தோட்டம் மூடப்படும்.
அனைத்து பார்வையாளர்களுக்கும் நுழைவு மற்றும் வெளியேறும் வழி குடியரசுத் தலைவர் தோட்டத்தின் வாயில் எண் 35- ஆக இருக்கும், இது வடக்கு அவென்யூ, குடியரசுத் தலைவர் மாளிகை ஆகியவை சந்திக்கும் இடத்திற்கு வெகு அருகில் உள்ளது. பார்வையாளர்களின் வசதிக்காக, மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து வாயில் எண் 35 வரை ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் ஒருமுறை காலை 9.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை பேருந்து சேவை கிடைக்கும்.
அமிர்த தோட்டம் பின்வரும் நாட்களில் சிறப்பு பிரிவுகளுக்கு திறக்கப்படும்: ∙
மார்ச் 26 – மாற்றுத்திறனாளிகளுக்கு ∙
மார்ச் 27 – பாதுகாப்பு, துணை ராணுவம் மற்றும் காவல்துறை பணியாளர்களுக்கு ∙
மார்ச் 28 – பெண்கள் மற்றும் பழங்குடியின மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ∙
மார்ச் 29 – மூத்த குடிமக்களுக்கு தோட்டத்துக்கு
முன்பதிவு மற்றும் நுழைவு இலவசம். https://visit.rashtrapatibhavan.gov.in/. என்ற முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
2025 மார்ச் 6 முதல் 9 வரை அமிர்த தோட்டத்தின் ஒரு பகுதியாக பன்முகத்தன்மையின் அமிர்தப் பெருவிழாவை குடியரசுத் தலைவர் மாளிகை நடத்துகிறது. இந்த ஆண்டு பெருவிழா தென்னிந்தியாவின் வளமான, தனித்துவமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக இருக்கும்.