புதுதில்லியில் நடைபெற்ற இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நீடித்த சுற்றுவரிசை குறித்த 3-வது சர்வதேச மாநாட்டில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் உரையாற்றினார். ‘இயற்கை முறையில் மறுசுழற்சி’ என்ற கருபொருளில் நடைபெற்ற இந்த மாநாடு, வாகன உற்பத்தித் துறையைச் சேர்ந்த முக்கிய நிறுவனங்களை ஒன்றிணைத்து நிலையான வளர்ச்சி, சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்த அம்சங்களை விரிவாக விவாதித்தது.
பயணியர் வாகன விற்பனையில் உலகளவில் மூன்றாவது பெரிய சந்தையாக திகழும் இந்தியாவின் வாகன உற்பத்தித் துறையின் விரைவான வளர்ச்சிக்கு இடையே இது குறித்த விவாதங்கள், தொடங்கியுள்ளதாக திரு பூபேந்திர யாதவ் தனது தொடக்க உரையில் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இயற்கை முறையில் மறுசுழற்சி செய்வதற்கான நடைமுறைகளில் உத்வேகம் பெற்று, சுற்றுச்சூழல் நிலைத்தன்மையுடன் இதற்கான வளர்ச்சியானது சீரமைக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ‘இயற்கை முறையில் மறு சுழற்சி’ நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்திய அமைச்சர், இயற்கையைப் போல் வேறு யாரும் மறுசுழற்சி செய்ய முடியாது என்று தெரிவித்தார். இயற்கையின் உற்பத்தி அளவோடு நம்மால் போட்டி போட முடியாது. அதே நேரத்தில் அதிக உற்பத்தி என்ற போதிலும் கழிவுகள் பூஜ்ய அளவில்தான் உள்ளது என அவர் கூறினார். உற்பத்தித் துறையில் நாட்டின் திறன் குறித்து பெருமிதம் கொள்ளும் அதே வேளையில், கழிவுகளை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கு இயற்கையிடமிருந்து நாம் பாடம் கற்றக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கூறியதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். மறுசுழற்சிக்கான உத்திகள் வகுக்கப்படும்போது இயற்கையை தங்கள் இலட்சியமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=209