Mon. Dec 23rd, 2024

Month: August 2024

தேசிய மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த 2 நாள் பயிற்சி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது

மணிப்பூர் பல்கலைக்கழகம், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துடன்  இணைந்து, 30 ஆகஸ்ட் 2024 அன்று ‘இந்தியாவில் மனித உரிமைகள் குறித்த இரண்டு நாள் பயிற்சி நிகழ்ச்சியை நிறைவு செய்தது.  மணிப்பூர் பல்கலைக்கழகத்தின் நீதிமன்ற அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட சட்ட வல்லுநர்கள், கல்வியாளர்கள், மனித உரிமை…

மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஆகஸ்ட் 29 அன்று ராஞ்சியில் 18 வது திவ்ய கலா மேளாவை திறந்து வைக்கிறார்

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், நாளை ராஞ்சியில் 18-வது திவ்ய கலா மேளாவை தொடங்கி வைக்கிறார். இந்தத் தனித்துவமான 11 நாள் நிகழ்வு, ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 8, வரை நடைபெறும், இந்தியா முழுவதிலும்…

பெண்களுக்கும், வளரிளம் பருவ பெண்களுக்கும், சிறப்பு திறன் மேம்பாட்டுத் திட்டம்

திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகமும் பெண்கள் -குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமும் இணைந்து 9 மாநிலங்களில்  27 முன்னேறும் ஆர்வமுள்ள மாவட்டங்களில் சிறப்புப் பகுதிகளில் பெண்களுக்கும், வளரிளம் பெண்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முன்னோடி திட்டத்திற்கான அறிமுக அமர்வை நடத்தின. இந்த முன்னோடித் திட்டம் இரு அமைச்சகங்களுக்கிடையேயான ஒத்துழைப்பில் நடைபெறுகிறது. தொழிலாளர் தொகுப்பில் பெண்கள் நுழைவதை எதிர்கொள்ளும் தடைகளை நிவர்த்தி செய்ய இந்த முயற்சி…

பேரிடர் நிர்வாகம் குறித்த அனுபவப் பகிர்வு, திறன் கட்டமைப்பு கருத்தரங்கு தில்லியில் நடைபெற்றது

பேரிடர் நிர்வாகம் குறித்த அனுபவப் பகிர்வு, திறன் கட்டமைப்பு கருத்தரங்கை தில்லியில் உள்ள கொள்கை ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு, பயிற்சிக்கான தேசிய தொலைத் தொடர்பு நிறுவனம், எல்எஸ்ஏ ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தொலை தகவல் தொடர்புத் துறையின் பேரிடர் நிர்வாகப் பிரிவு நடத்தியது.…

தொழில்நுட்ப ஜவுளித் துறையில் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

புதுதில்லியில் உள்ள உத்யோக் பவனில் இன்று தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் கீழ் 8-வது அதிகாரமளிக்கப்பட்ட திட்டக் குழு கூட்டத்திற்கு ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்கினார். ‘தொழில்நுட்ப ஜவுளித் துறையில் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களிடையே ஆராய்ச்சி மற்றும் தொழில்முனைவோருக்கான மானியம் (கிரேட்)’ திட்டத்தின் கீழ், தலா 50 லட்சம் ரூபாய் மானியத்துடன் 4 புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்தக்…

ஜென்மாஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

ஜென்மாஷ்டமி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “உங்கள் அனைவருக்கும் இனிய  ஜென்மாஷ்டமி நல்வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!”

தேசிய நிலக்கரி சுரங்கங்கள் பாதுகாப்பு அறிக்கை தளம் குறித்த ஆய்வு

நிலக்கரி நிறுவனங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பிடுவதற்காக, நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு அம்ரித் லால் மீனா, தேசிய நிலக்கரி சுரங்க பாதுகாப்பு அறிக்கை தளத்தின் தற்போதைய வளர்ச்சியை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் கோல் இந்தியா லிமிடெட் (சிஐஎல்)…

குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் தேச கட்டமைப்புக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை வெறும் நிறுவனமாகப் பார்க்கக் கூடாது எனவும் அவை மிகப் பெரிய சக்தியாக இருக்கின்றன எனவும் மத்திய தொழில் – வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். அவை  லட்சக்கணக்கான நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன என்றும் தேச நிர்மாணத்தில் சிறந்த பங்களிப்பை அளிக்கின்றன எனவும் அவர் தெரிவித்தார். புதுதில்லியில் நடைபெற்ற 10 வது இந்திய சர்வதேச குறு,சிறு, நடுத்தர நிறுவன புத்தொழில் கண்காட்சி, உச்சி மாநாடு 2024-ல் அவர் பங்கேற்றுப் பேசினார். புதுமையான சிந்தனைகளும், புதிய வழிகளும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்முனைவோரின் அடையாளமாக உள்ளன என்று திரு கோயல் கூறினார். பெரிய தொழில்கள் ஆயிரக்கணக்கான, குறு,சிறு, நடுத்தர நிறுவனங்களை உள்ளடக்கியது எனவும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்  இல்லாமல் பெரிய நிறுவனங்கள் வெற்றி பெற முடியாது என்றும் அவர் தெரிவித்தார். நாட்டின் சுற்றுலா, உள்கட்டமைப்பு வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார். இந்தத் துறையின் வளர்ச்சி நாட்டிற்கு இன்றியமையாதது என்று அவர் கூறினார். 140 கோடி நாட்டு மக்களும் ஒன்றிணைந்து தேச நிர்மாணத்தில் பங்களிக்கும்போது, 2047-ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் என்றும், அனைவருக்கும் வளத்தை நம்மால் உறுதி செய்ய முடியும் என்றும் வர்த்தக அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் (QCO) மூலம் அரசு குறு, சிறு, நடுத்தர நிறுவன துறைக்கு ஆதரவளிக்கிறது என்ற உண்மையை திரு பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்பங்களை குறு, சிறு தொழில்முனைவோருக்குக் கொண்டு செல்ல நடவடிக்கை- சிஎஸ்ஐஆர், எல்யுபி ஆகியவை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

அறிவியல் – தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலும் (CSIR-சிஎஸ்ஐஆர்) லகு உத்யோக் பாரதியும் (LUB) சிஎஸ்ஐஆர் தலைமையகத்தில் 21 ஆகஸ்ட் 2024 அன்று குறு, சிறு தொழில்முனைவோருக்கு சிஎஸ்ஐஆர் தொழில்நுட்பங்களைக் கொண்டு செல்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. லகு உத்யோக் பாரதி என்பது 1994 முதல் இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட குறு  சிறு தொழில்களுக்கான அகில இந்திய அமைப்பாக திகழ்கிறது. இந்தியாவின் 27 மாநிலங்களில் 575 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் 51000 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நிறுவனமாகும் இது. இந்த…

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்திற்கும் தபால் துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

வளர்ச்சியடைந்த இந்தியா என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தீர்மானத்தை நிறைவேற்ற காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம், குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள தபால் துறை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்…

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta