கடைகளில் விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்களில் அதிகளவில் மிகச்சிறிய
பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளதாகவும், இதனை குடிப்பதன் மூலம் உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு,
உயிரணுக்கள் மூலம் பிறக்கும் குழந்தையே பாதிக்கப்படலாம் என ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. தண்ணீர்.. மனிதர்களாகிய நாம் உயிர் வாழ தேவையான
மிகவும் முக்கியமான பொருளாக உள்ளது. உணவு இன்றி கூட தண்ணீர் குடித்து மனிதனால் சில நாட்கள் வரை உயிர் வாழ முடியும். இதனால் தான்
தண்ணீரை பாதுகாக்க இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் சுத்தமான குடிநீரை பருக வேண்டும். தூய்மையற்ற குடிநீரை பருகுவது என்பது உடல் உபாதைகளை
ஏற்படுத்தும். இதனால் தண்ணீர் பாதுகாப்பில் அனைவரும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டியது மிகவும்
முக்கியமானதாகும். இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் நாம் பிளாஸ்டிக் கேன்களில் ஆங்காங்கே கடைகளில்
விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கி பருகி வருகிறோம். இது தான் தூய்மையான குடிநீர் என்ற பிம்பம் நம்மிடையே
கட்டமைக்கப்பட்டு இருப்பதே இதற்கு காரணமாகும். இந்நிலையில் தான் கடைகளில் விற்பனை செய்யப்படும் பிளாஸ்டிக்
பாட்டில்களில் இருக்கும் தண்ணீர் என்பது மனிதர்களுக்கு தீங்கானது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது
பிளாஸ்டிக் கேன்களில் அடைக்கப்பட்டு இருக்கும் குடிநீரில் கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிகள் துண்டுகள் கலந்து இருப்பது
ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. பொதுவாக தண்ணீர் பாட்டில்கள் பொதுவாக பாலிஎதிலீன் டெரேப்தாலேட் மற்றும்
பாலிமைடு உள்ளிட்ட 7 பொருட்களுடன் உருவாக்கப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 450 மில்லியன்
டன் பிளாஸ்டிக் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் தான் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்தவர்கள் தண்ணீர்
பாட்டிலில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்கள் தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர். தற்போது இந்த ஆய்வு முடிவு என்பது
நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸ் இதழில் இதுதொடர்பாக விரிவான கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள
ஷாக் தகவல் வருமாறு: மக்கள் இப்போது பிளாஸ்டிக் கேன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் தண்ணீரை வாங்கி பருகி
வருகிறோம். ஆனால் இந்த பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்யப்படும் தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலப்பது
என்பது உடல்நலனை பாதிக்கும் வகையில் உள்ளது. அதாவது அந்த தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்துள்ளன. இவை
கண்ணுக்கு தெரியாத வகையில் கலந்து இருப்பதால் மக்கள் அறிவது இல்லை. இது தான் மக்களுக்கு ஆபத்தாக கருதப்படுகிறது.
பொதுவாக பிளாஸ்டிக் துகள்கள் என்பது மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் என வகைப்படுத்தப்படுகிறது.
இதில் மைக்ரோ பிளாஸ்டிக் என்பது 1 முதல் 5 ஆயிரம் மைக்ரோ மீட்டர் அளவுக்குள் இருக்கும். மாறாக நானோ பிளாஸ்டிக்
துகள்களின் அளவு என்பது 1 மைக்ரோ மீட்டருக்கும் குறைவானதாக இருக்கும். அதாவது ஒரு முடியின் சைஸில் 70ல் ஒரு பங்கு என
வைத்து கொள்ளலாம். அப்படி என்றால் நானோ பிளாஸ்டிக் துகள் எவ்வளவு சிறியதாக இருக்கும் என்பதை நீங்களே கணக்கீட்டு
கொள்ளுங்கள். அதோடு மைக்ரோ பிளாஸ்டிக்கை விட நானோ பிளாஸ்டிக் என்பது மக்களுக்கு மிகவும் ஆபத்தானதாக பார்க்கப்படுகிறது.
நானோ பிளாஸ்டிக் துகள்கள் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இது மனிதரின் ரத்த ஓட்டத்தில் கலந்து உறுப்புகளை பாதிக்கலாம்.
மேலும் மனித உயிரணுக்களுக்குள் ஊடுவலாம். இதன்மூலம் கருவில் இருக்கும் குழந்தைகள் கூட பாதிக்கலாம். தண்ணீரில் நானோ
பிளாஸ்டிகள் துகள்களை அடையாளம் காணும் தொழில்நுட்பம் என்பது இல்லை. இதனால் முந்தைய ஆய்வுகள் என்பது நானோ பிளாஸ்டிக்
குறித்த விபரங்களை கூறவில்லை. மைக்ரோ பிளாஸ்டிக் துகள்களின் அளவை மட்டுமே தெரிவித்தன. அதன்படி பார்த்தால் தண்ணீர்
பாட்டிலில் இருக்கும் பிளாஸ்டிக் துகள்களின் எண்ணிக்கை என்பது 100 மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் இதனால்
நானோ பிளாஸ்டிக்களின் அளவை கணக்கிட ஆய்வாளர்கள் நவீன நுண்ணோக்கிகளை பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டது.
அமெரிக்காவில் பிரபலமான 3 பிராண்டுகளில் இருந்து 251 லிட்டர் தண்ணீர் பாட்டில் வாங்கப்பட்டது. அதன் தண்ணீர் நவீன
நுண்ணோக்கியை வைத்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது மிகச்சிறிய பிளாஸ்டிக் துகள்கள் தண்ணீரில் கலந்து இருப்பது தெரியவந்தது.
ஒவ்வொரு லிட்டர் தண்ணீரிலும் குறைந்தபட்சம் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 3 லட்சத்து 70 ஆயிரம் பிளாஸ்டிக் துகள்கள்
இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 90 சதவீதம் என்பது நானோ பிளாஸ்டிக் துகள்களாகும்.