Sat. Apr 5th, 2025

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தொழிலாளர்களின் வாழ்க்கை முறையை எளிதாக்குவதையும், தொழில் நிறுவனங்கள் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு மேலும் சில எளிமைப்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதன் காப்பீடு கோரிக்கை தீர்வு செயல்பாட்டில் இரண்டு முக்கிய எளிமைப்படுத்தல் நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கைகள் காப்பீட்டு கோரிக்கை தீர்வு செயல்முறையை கணிசமாக நெறிப்படுத்தி, கோரிக்கை நிராகரிப்பு தொடர்பான குறைகளைக் நீக்கும்.

இணையதள கோரிக்கைகளை தாக்கல் செய்யும் போது காசோலை அல்லது சான்றளிக்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்தின் படத்தை பதிவேற்ற வேண்டும் என்ற தேவையை இபிஎஃப்ஓ முற்றிலுமாக நீக்கியுள்ளது. 2024 மே 28 அன்று சோதனை அடிப்படையில் இது தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த நடவடிக்கை ஏற்கனவே 1.7 கோடி உறுப்பினர்களுக்கு பயனளித்துள்ளது.

வெற்றிகரமான சோதனை முயற்சியைத் தொடர்ந்து, இபிஎஃப்ஓ  இப்போது இந்த தளர்வை அனைத்து உறுப்பினர்களுக்கும் நீட்டித்துள்ளது.

மற்றொரு நடவடிக்கையாக வங்கிக் கணக்கு விவரங்களை யுனிவர்சல் கணக்கு எண்ணுடன்  இணைப்பதற்கான தொழில் நிறுவன ஒப்புதலைப் பெற வேண்டிய தேவை நீக்கப்பட்டுள்ளது.

இபிஎஃப்ஓ இப்போது வங்கி சரிபார்ப்பிற்குப் பிறகு தொழில் நிறுவனத்தின் ஒப்புதலைப் பெற வேண்டிய தேவையை நீக்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118168


காப்பீட்டு கோரிக்கை தீர்வு செயல்முறையை இபிஎஃப்ஓ எளிதாக்குகிறது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta