Thu. Apr 3rd, 2025

பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையானது பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த மத்திய நிதியுதவித் திட்டமான சமக்ர சிக்ஷா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டம் தேசிய கல்விக் கொள்கை 2020 ன் பரிந்துரைகளுக்கு ஏற்ப, தொடக்கக் கல்விக்கு முந்தைய வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிக் கல்வியை முழுமையாகக் கையாள்கிறது. அனைத்து குழந்தைகளுக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வகுப்பறை சூழலுடன் தரமான கல்வி வழங்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ், திட்டத்தின் பல்வேறு விதிகளை செயல்படுத்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது, இதில் தொடக்க நிலையில் உள்ள குழந்தைகளுக்கு இலவச சீருடைகள், தொடக்க நிலையில் இலவச பாடப்புத்தகங்கள், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் செலுத்திய கட்டணத்தை திரும்பப் பெறுதல், பழங்குடி மொழிக்கான தொடக்கப்பள்ளிகள் / பாடப்புத்தகங்கள் உருவாக்குதல், கற்பித்தல் மற்றும் கற்றல் உபகரணங்கள், இடைநிலைக் கல்வி வரை போக்குவரத்து / பாதுகாவலர் வசதி, பள்ளி செல்லாக் குழந்தைகளை வயதுக்கேற்றவாறு வகுப்பில் சேர்த்தல், பெரிய மாணவர்களுக்கு உண்டு உறைவிடப் பயிற்சி, உண்டு உறைவிடப் பயிற்சி, பருவகால விடுதிகள் / உண்டு உறைவிட முகாம்கள், சிறப்புப் பயிற்சி மையங்கள், வயதுக்கேற்ற உண்டு உறைவிடப் பயிற்சி, தேசிய திறந்தவெளி பள்ளி மூலம் பள்ளி செல்லாதவர்களுக்கு (16 முதல் 19 வயது வரை) கல்வியை நிறைவு செய்ய உதவுதல், இருமொழி கற்பித்தல் உபகரணங்கள் மற்றும் புத்தகங்கள் ஆகிய உதவிகள் வழங்கப்படுகின்றன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் கல்வித்துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சவுத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2114376


அனைவருக்கும் கல்வி
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta