Fri. Apr 4th, 2025

நிலைத்தன்மையிலும் எரிசக்தியில் தற்சார்பை நோக்கிய இந்தியாவின் பயணத்திலும் அணுசக்தியின் முக்கிய பங்கு குறித்து மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் ஆழ்ந்த கருத்துக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கின் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“நிலையான, தற்சார்பான எரிசக்தி எதிர்காலத்திற்கான இந்தியாவின் தேடலில் அணுசக்தி எவ்வாறு ஒரு முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது என்பதை மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ( @DrJitendraSingh ) விரிவாக எடுத்துரைத்துள்ளார்.”


அணுசக்தி மூலம் நிலையான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta