ஆண்டுதோறும் மார்ச் 24 அன்று கடைபிடிக்கப்படும் உலக காசநோய் தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“உலக காசநோய் தினத்தையொட்டி, மக்கள் பங்கேற்பின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் நடத்தி வரும் தேசிய இயக்கத்தை நான் பாராட்டுகிறேன்.
காசநோயை ஒழிப்பதற்கு ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த உலகளாவிய முயற்சி தேவை என்பதைப் பிரதிபலிப்பதாக “ஆம், நம்மால் காச நோயை முடிவுக்கு கொண்டு வர முடியும்: அர்ப்பணிப்பு, முதலீடு மற்றும் செயல்படுத்தல் ” என்ற இந்த ஆண்டின் மையக் கருத்து விளங்குகிறது. காசநோயை ஒழிப்பது என்பது தேசிய மற்றும் உலகளாவிய சுகாதார சவாலாகும். இந்தத் தொற்று நோய் உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பாதித்துள்ளது. காசநோயை முடிவுக்கு கொண்டு வர நாம் மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சிகள் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் காசநோய் பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது. தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் இந்தக் குறிப்பிடத்தக்க சாதனையை நான் பாராட்டுகிறேன்.
அனைத்து பங்குதாரர்களும் பங்கேற்பாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டு இந்தியாவை காசநோய் இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று குடியரசுத் தலைவர் கூறியுள்ளார்.