பிரதமர் அலுவலக செய்தி குறிப்பு : சர்வதேச அளவில் இந்தியாவின் தொடர்புகளை ஆழப்படுத்தும் வகையில், முயற்சிகளை மேற்கொள்ளும் இந்திய வம்சாவளியினருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இந்திய வம்சாவளியினரில் ஒருவராகப் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாக அவர் கூறினார்!சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:”உலகத்துடன் இந்தியாவின் ஈடுபாட்டை ஆழப்படுத்துவதற்கான நமது இந்திய வம்சாவளியினரின் முயற்சிகள் குறித்து நாம் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
இன்று மாலை, மோடிக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் நானும் இருக்கப்போவதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன். இந்த மறக்கமுடியாத நிகழ்வில் இணைந்திருங்கள்.”
செய்தி ஆதாரம்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2005521