சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைதார்கள்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri)., அவர்கள் அறிவுறுத்தலின் படி திருவாரூர் மாவட்ட சைபர் க்ரைம் காவல்துறையினர் மற்றும் நியூ பாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி இணைந்து சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நடைப்பேரணி இன்று (13.02.2024) நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு பேரணியை, திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். இப்பேரணியில் நியூ பாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டார்கள்.
அப்போது திருவாரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.P.மணிகண்டன், திருவாரூர் சைபர் க்ரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஸ்ரீபிரியா, சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் திரு.கணபதி, காவலர்கள், நியூ பாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி முதல்வர் திரு.முரளி மற்றும் நியூ பாரத் மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டார்கள்.