ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஏற்படுத்தக் கூடிய உருமாற் ஆற்றலை அங்கீகரித்து, மகளிர் தொழில்முனைவோர்களை வளர்க்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 73000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டு இயங்கி வருகின்றன. இது புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் பெண்களின் முக்கியப் பங்கை எடுத்துக் காட்டுகிறது.
பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை நாடு முழுவதும் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டம் பெண்களுக்கான தென்னை நார் திட்டங்கள் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன.
ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் முத்ரா கடனுதவி திட்டங்கள் பெண் தொழில்முனைவோருக்கு பெருமளவில் பயனளித்து வருகின்றன.
இந்தத் தகவலை மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2113658