Sat. Apr 5th, 2025

தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோருடன் புதுதில்லியில் மத்திய உள்துறை செயலாளர், சட்டமன்றத் துறை செயலாளர், தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 23(4), 23(5) மற்றும் 23(6) ஆகியவற்றின் விதிகளின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும் வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு இடையே தொழில்நுட்ப ஆலோசனைகள் விரைவில் தொடங்க உள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2112377


வாக்காளர் அடையாள அட்டை எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கு, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளின்படி தேர்தல் ஆணையம் நடவடிக்கை
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta