Sat. Apr 5th, 2025

இத்தாலியில் உள்ள டுரின் நகரில் நடைபெற்ற உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் 2025-ல் இந்திய தடகள வீரர்களின் சிறப்பான செயல்திறனை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். இந்திய அணி 33 பதக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்து, உலக அரங்கில் நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளது.

நாடாளுமன்றத்தில் விளையாட்டு வீரர்களைச் சந்தித்த திரு மோடி, அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“இத்தாலியின் டுரின் நகரில் நடைபெற்ற உலகக் குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்கு பெருமை சேர்த்த நமது விளையாட்டு வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நமது சிறப்புமிக்க அணி 33 பக்கங்களைத் தாயகத்திற்கு கொண்டு வந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் குழுவினரைச் சந்தித்து அவர்களின் சாதனைகளுக்கு வாழ்த்து தெரிவித்தேன் @SpecialOlympics”


உலக குளிர்கால சிறப்பு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 33 பதக்கங்களை வென்ற இந்தியக் குழுவினருக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta