Sun. Apr 13th, 2025

மத்திய அரசின் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் 2.0 என்ற மேம்படுத்தப்பட்ட போர்ட்டலை தொடங்கி உள்ளது. கடந்த பதிப்பில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவர்கள் மட்டுமே போர்ட்டலை அணுகிப் பயன்படுத்த முடியும். தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2.0 போர்ட்டலை நாடுமுழுவதும் அனைத்து குடிமக்களும் பயன்படுத்தலாம்.பொருளாதார நிலை, பாலினம், சாதி, மதம், இனம், பிராந்தியம் மற்றும் இடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்காகவும் இதுதொடங்கப்பட்டுள்ளது.

நிறுவன பங்கேற்பு: இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்களின்படி இளையோர் நாடாளுமன்ற அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த பிரிவில் பங்கேற்கலாம். ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் “கிஷோர் சபா” துணைப் பிரிவுக்கும், இளங்கலை மற்றும் முதுகலை நிலை மாணவர்கள் “தருண் சபா” துணைப் பிரிவிற்கும் தேர்ந்தெடுக்கப்படலாம்.

குழு பங்கேற்பு: இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்களின்படி இளையோர் நாடாளுமன்ற அமர்வுகளை ஏற்பாடு செய்வதன் மூலம் குழுவினர் இந்தப் பிரிவில் பங்கேற்கலாம்.

தனிநபர் பங்கேற்பு: ‘பாரதிய ஜனநாயகம் செயல்பாட்டில் உள்ளது’ என்ற கருப்பொருளில் வினாடி வினாவில் பங்கேற்பதன் மூலம் ஒரு தனிப்பட்ட நபர் இந்தப் பிரிவில் பங்கேற்கலாம்.

கேந்திரிய வித்யாலயாக்கள், ஜவஹர் நவோதயா வித்யாலயாக்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் / கல்லூரிகள் உள்ளிட்டவற்றில் தேசிய இளையோர் நாடாளுமன்ற போட்டிகளில் அதன் முக்கிய பங்குதாரர்களிடையே தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் 2.0-ல் பங்கேற்பதை அமைச்சகம் தீவிரமாக ஊக்குவித்துள்ளது. கூடுதலாக, அமைச்சகம் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும், அனைத்து சட்டப் பேரவைகளுக்கும் மற்றும் கவுன்சில்களுக்கும் கடிதம் எழுதியுள்ளது. ஜனநாயகத்தின் வேர்களை வலுப்படுத்துதல், ஒழுக்கத்தின் ஆரோக்கியமான பழக்கங்களை வளர்த்தல் என்ற அதன் நோக்கத்தை அடைவதில் இளையோர் நாடாளுமன்ற திட்டத்தின் தாக்கத்தை விரிவுபடுத்த தேசிய இளையோர் நாடாளுமன்ற திட்டம் இணையதளத்தில் பங்கேற்பை அதிகரிக்குமாறு வலியுறுத்தியுள்ளது.

மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.


தேசிய இளையோர் நாடாளுமன்றம் 2.0 திட்ட போர்ட்டல் தொடங்கியது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta