Sun. Apr 13th, 2025

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, ஹிசாரில் உள்ள பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை இன்று (மார்ச் 10, 2025) அதன் பொன்விழாவில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், மனிதனால் உருவாக்கப்பட்ட ஆனால் எல்லைகளைக் கடந்து உயர்ந்து நிற்கும் ஆன்மிகமானது ஒட்டுமொத்த மனித குலத்தையும் ஒன்றிணைக்கிறது என்றார். ஆன்மீகத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட சமூக, பொருளாதார, அறிவியல், கலாச்சார, அரசியல் அல்லது வேறு எந்த வகையான அமைப்பும் நெறிமுறை மற்றும் நிலையானதாக இருக்கும். எப்போதும் ஆன்மீக உணர்வை விழிப்படையச் செய்யும் ஒரு நபர், மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தையும், உள் அமைதியையும் அனுபவிக்கிறார் என்று அவர் தெரிவித்தார்.

ஆன்மீக அமைதியை அனுபவிக்கும் ஒருவர், நேர்மறை சக்தியுடன் மற்றவர்களின் வாழ்க்கையையும் வளப்படுத்துகிறார் என்று குடியரசுத் தலைவர் கூறினார். ஆன்மீக அமைதியின் உண்மையான பயன் தனிமையில் இருப்பதில் இல்லை என்றும் அவர் கூறினார். ஆரோக்கியமான, வலிமையான, வளமான சமூகத்தையும், தேசத்தையும் கட்டியெழுப்ப அது பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பிரம்ம குமாரிகள் ஆன்மீக சக்தியை நாட்டிற்கும், சமுதாயத்திற்கும் நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவதாக குடியரசுத் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்தார். போதைப்பொருள்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரச்சாரம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல சமூக மற்றும் தேசிய முயற்சிகளில் இந்த அமைப்பு பங்களித்து வருவதாக குடியரசு தலைவர் குறிப்பிட்டார். பிரம்ம குமாரி குடும்பம் ஆன்மீகத்தின் வலிமையில் மக்களின் முழுமையான ஆரோக்கியத்திற்கும் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தொடர்ந்து பங்களிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


பிரம்ம குமாரிகளின் ‘முழுமையான நல்வாழ்வுக்கான ஆன்மீகக் கல்வி’ என்ற மாநில அளவிலான பிரச்சாரத்தை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta