மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் – நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின்போது 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளிகள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்தனர்
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தனது திட்டங்கள் குறித்து நமது லட்சியம் வளர்ச்சியடைந்த பாரதம் யாத்திரையின் போது விளக்கி வருகிறது. தகவல்களைப் பரப்புதல், திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் மற்றும் அரசுத் திட்டங்களில் ஏற்கெனவே பயனடைந்த பயனாளிகளுடன் அவர்களின் தனிப்பட்ட அனுபவப் பகிர்வு ஆகியவை இந்த யாத்திரையில் மேற்கோள்ளப்படுகிறது.
இந்த யாத்திரையின் போது மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் பல்வேறு திட்டங்களின் மூலம் தாங்கள் பெற்ற நன்மைகள் குறித்துப் பேச பயனாளிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அங்கன்வாடி சேவைகள் திட்டத்தில் பதிவு செய்வதற்கான பயனாளிகளின் நேரடி பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
2024 ஜனவரி 04 நிலவரப்படி, பல்வேறு அமைச்சகங்களின் சுமார் 60 திட்டங்களைச் சேர்ந்த 14.70 லட்சம் பயனாளிகள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளனர். அவர்களில் 1,03,594 பேர் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் திட்டங்களால் பயனடைந்துள்ளதாக கூறியுள்ளனர். இதில் போஷன் அபியான் எனப்படும் ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டத்தில் 54,258 பேர் பயனடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.