Sat. Apr 12th, 2025

மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய மின் உற்பத்தி அமைப்புகள், உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆணை, 2025-ஐ அறிவித்துள்ளது. இது தற்போதைய சூரிய ஒளிமின்னழுத்தக் கருவி, அது சார்ந்த அமைப்புகள், சாதனங்கள், உதிரி பாகங்கள் போன்ற பொருட்களுக்கான (கட்டாய பதிவுக்கான தேவைகள்) ஆணை, 2017 என்பதை திருத்தியமைத்து அதற்குப் பதிலாக நடைமுறைக்கு வருகிறது.இந்த திருத்தம் 27.01.2025 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது அரசிதழில் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 180 நாட்களுக்குள் அமலுக்கு வரும். இந்த சட்டத் திருத்தத்தின் கீழ் சூரிய மின் உற்பத்திக்கான தொகுதிகள், மின் விநியோக இன்வெர்ட்டர்கள் மற்றும் சேமிப்பு மின்கலங்கள் ஆகியவை அடங்கும்.

திருத்தப்பட்ட தரக் கட்டுப்பாட்டு ஆணை குறித்து புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 24 மாதங்கள் வரை அது சார்ந்த அனைத்து தர்பபினருடனும் கலந்து ஆலோசித்தது.சூரிய மின் உற்பத்திக்கான தொகுதிகளின் உற்பத்தியாளர்கள், இன்வெர்ட்டர் உற்பத்தியாளர்கள், மின்கல உற்பத்தியாளர்கள், தயாரிப்புகளுக்கான பரிசோதனை ஆய்வகங்கள், தேசிய சூரிய எரிசக்தி நிறுவனம், இந்திய தர நிர்ணய அமைவனம் ஆகியவற்றுடன் உரிய ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தத் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவிக்கும் அதே வேளையில், மிக உயரிய அளவிலான தரத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் இந்த முயற்சி எடுத்துக் காட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2097219


புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றியமைக்கும் பொருட்களுக்கான திருத்தப்பட்ட தரக் கட்டுப்பாட்டு ஆணையை வெளியிடப்பட்டுள்ளது
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta