பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மஹாகும்பமேளா 2025 -ல் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மத்திய அரசின் முன்முயற்சிகளின் மூலம் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதை முன்னிலைப்படுத்தும் மின்னணு கண்காட்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

‘ஒரே நாடு, ஒரே வரி’, ‘ஒரே நாடு, ஒரே மின் தொகுப்பு’, ‘ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ போன்ற மத்திய அரசின் முன்முயற்சிகள் மூலம் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற சொற்றொடர் விளக்கப்படுகிறது. பிரயாக்ராஜின் மகாகும்பமேளாவில் உள்ள திரிவேணி மார்க்கில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அமைத்துள்ள மின்னணு கண்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு, நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தும் இந்த முயற்சிகள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. ஒற்றுமையின் செய்தியை தெரிவிக்கும் ஒரு படத்தில் தேசிய ஒற்றுமையின் சின்னமான சர்தார் படேலின் சிலையும் உள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இருந்து 370 வது பிரிவு நீக்கப்பட்டதன் மூலம், ‘ஒரே நாடு, ஒரே அரசியலமைப்பு’ என்ற உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மற்றும் ‘ஒரே நாடு, ஒரே சிவில் சட்டம்’ ஆகியவற்றை நோக்கிய முன்முயற்சிகள் வளர்ச்சியடைந்த இந்தியாவின் கனவை நனவாக்குவதை விரைவுபடுத்துகின்றன. இது கண்காட்சியில் அனைவரையும் ஈர்க்கும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பொது நலத் திட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத்திய அரசின் சாதனைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கண்காட்சி, தொழில்முனைவோர் மற்றும் சுய வேலைவாய்ப்பை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை வலியுறுத்துகிறது. இது முத்ரா திட்டம், பிரதமர் விஸ்வகர்மா திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு உறுதி திட்டம், கடன் உத்தரவாத நிதித் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் உணரப்படுகிறது. ஜனவரி
13-ம் தேதி கண்காட்சி தொடங்கியதிலிருந்து, ஏராளமான பக்தர்கள் வருகை தந்து, ஒலி-ஒளி ஊடகங்கள் மூலம் வளர்ச்சி, பாரம்பரியம் பற்றிய தகவல்களை அறிந்துள்ளனர். எல்இடி திரையில் திரையிடப்படும் அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கும் ஆவணப்படங்கள் பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. அதனுடன் அவர்கள் செல்ஃபியும் எடுத்து வருகின்றனர்.