நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், வீர தீர தினம் (பராக்ரம் திவாஸ்) கொண்டாடப்படுவதை முன்னிட்டு, மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை இணையமைச்சர் திருமதி ரக்ஷா நிகில் காட்சே, நாளை (2025 ஜனவரி 23) அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்ரீவிஜயபுரத்தில் (போர்ட் பிளேர்) ‘ஜெய் ஹிந்த் பாதயாத்திரை’ நிகழ்வில் பங்கேற்கிறார். நேதாஜியின் துணிச்சலான உணர்வுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்ச்சியில் 1500 மை பாரத் இளைஞர் தன்னார்வலர்கள் பங்கேற்கின்றனர்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் தியாகத்தை அடையாளப்படுத்தும் வகையில், சுமார் 5 கிலோமீட்டர் தூரம் இந்தப் பாதயாத்திரை நடைபெறும். இதில் நேதாஜியின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெறும்.
இளைஞர்களுக்கான போட்டிகள், கலாச்சார நிகழ்ச்சிகள், நேதாஜி தொடர்பான புகைப்பட கண்காட்சி அரங்குகள் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.