நீடித்த எதிர்காலத்தை நோக்கிய மாற்றத்தை இந்தியா விரைவுபடுத்தி வரும் நிலையில், அதன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டுள்ளது. 2024-ம் ஆண்டில், சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்திக்கான நிறுவுதிறன்களில் நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. மேலும் 2025-ம் ஆண்டில் லட்சிய இலக்குகளுக்கு களத்தையும் அமைத்துள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைபடிவ எரிபொருள் அல்லாத எரிசக்தி திறனை அடைவதற்கான உறுதிப்பாட்டுடன், தூய்மையான எரிசக்தியில் உலகளாவிய முன்னணி நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. 20 ஜனவரி 2025 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த புதைபடிவம் அல்லாத எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தித் திறன் 217.62 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
2024-ம் ஆண்டில் சாதனை அளவாக 24.5 ஜிகாவாட் சூரிய எரிசக்தி திறனும், 3.4 ஜிகாவாட் காற்றாலை எரிசக்தி திறனும் நிறுவப்பட்டுள்ளன. இது 2023 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சூரிய சக்தி நிறுவுதிறனில் இரண்டு மடங்கு அதிகமாகும். காற்றாலை நிறுவுதிறனில் 21% அதிகமாகும்.
இது அரசின் சலுகைகள், கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் அதிகரித்த முதலீடுகளால் ஏற்பட்டுள்ள.
பிரதமரின் மேற்கரை சூரிய சக்தி வீடுகள் திட்டமும் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தில் பத்து மாதங்களுக்குள் 7 லட்சம் மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகள் வீடுகளில் நிறுவப்பட்டுள்ளன.
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது. தொடர்ச்சியான கொள்கை ஆதரவு, அதிகரித்த முதலீடு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றுடன், இந்தியா அதன் லட்சியப் பூர்வமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடைவதை நோக்கி முன்னேறுகிறது.