நாடுமுழுவதும் 31.05.2024 ம் தேதி நிலவரப்படி மொபைல் சேவைகள் மக்கள் தொகையில் 99.21 சதவீதமாகவும், 3ஜி மொபைல் சேவைகள் மக்கள் தொகையில் 99.0 சதவீதமாகவும் உள்ளன. வைஃபை சேவையின் தரநிலைகள், இணைய வழி சேவை வழங்குவோர், திட்டங்களின் வகைப்பாடுகள், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பொறுத்து பயனாளிகளின் எண்ணிக்கை அமைகிறது.
மொபைல் சேவைகள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் அவற்றின் தொழில்நுட்ப-வர்த்தக சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. மக்கள் வசிக்காத தொலைதூர கிராமங்களில் மொபைல் சேவைகளை படிப்படியாக கொண்டு வரும் வகையில் மத்திய அரசின் தொலைத் தொடர்பு துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், டிஜிட்டல் பாரத் நிதியத்தின் கீழ் ஒடிசா உட்பட நாட்டின் கிராமப்புற, தொலைதூர, மலைப்பாங்கான பகுதிகளில் அலைபேசி கோபுரங்களை நிறுவுவதன் மூலம் தொலைத் தொடர்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிகின்றன.
கூடுதலாக, டிஜிட்டல் பாரத் நிதியத்தின் நிதியுதவியுடன் கூடிய பாரத் நெட் திட்டம் (முன்பு தேசிய கண்ணாடி இழைநார் வலைதளம் என்று அழைக்கப்பட்டது) நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் அகண்ட அலைவரிசை இணைப்பை வழங்குவதற்கு ஏதுவாக படிப்படியாக செயல்படுத்தப்படுகிறது.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணையமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் இத்தகவலை தெரிவித்தார்.
ஜூன் 30, 2024 நிலவரப்படி, மாநிலம்/ யூனியன் பிரதேசம் வாரியாக மொத்த தொலைத்தொடர்பு அடர்த்தி | ||
எஸ்.எண். | மாநிலம்/யூ.டி | மொத்த தொலை அடர்த்தி (%) |
1 | ஆந்திரப் பிரதேசம் | 84.99 |
2 | அருணாச்சல பிரதேசம் | 82.13 |
3 | அசாம் | 74.25 |
4 | பீகார் | 55.80 |
5 | சத்தீஸ்கர் | 69.50 |
6 | கோவா | 160.06 |
7 | குஜராத் | 91.40 |
8 | ஹரியானா | 118.77 |
9 | ஹிமாச்சல பிரதேசம் | 119.81 |
10 | ஜார்கண்ட் | 62.62 |
11 | கர்நாடகா | 103.99 |
12 | கேரளா | 120.93 |
13 | மத்திய பிரதேசம் | 69.37 |
14 | மகாராஷ்டிரா | 102.14 |
15 | மணிப்பூர் | 77.04 |
16 | மேகாலயா | 79.52 |
17 | மிசோரம் | 115.40 |
18 | நாகாலாந்து | 76.54 |
19 | ஒடிசா | 78.05 |
20 | பஞ்சாப் | 111.56 |
21 | ராஜஸ்தான் | 82.66 |
22 | சிக்கிம் | 115.48 |
23 | தமிழ்நாடு | 104.29 |
24 | தெலுங்கானா | 111.03 |
25 | திரிபுரா | 79.18 |
26 | உத்தரப்பிரதேசம் | 70.32 |
27 | உத்தரகாண்ட் | 107.31 |
28 | மேற்கு வங்காளம் | 81.84 |
யூனியன் பிரதேசங்கள் | ||
1 | அந்தமான் நிக்கோபார் தீவுகள் | 131.93 |
2 | சண்டிகர் | 161.92 |
3 | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ | 67.91 |
4 | டெல்லி | 185.56 |
5 | ஜம்மு காஷ்மீர் | 89.17 |
6 | லடாக் | 195.88 |
7 | லட்சத்தீவு | 103.51 |
8 | புதுச்சேரி | 73.55 |
மொத்தம் | 85.95 |
ஆதாரம்: தொலைத்தொடர்பு சேவைகளின் செயல்திறன் குறிகாட்டிகள் குறித்த TRAI இன் காலாண்டு அறிக்கை (ஏப்ரல்-ஜூன் 2024)
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2086009