Mon. Dec 23rd, 2024

உணவு பதனப்படுத்துதல் துறையில்  மொத்த அந்நிய நேரடி முதலீடு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 2019-20-ம் ஆண்டில் 904.7 மில்லியன் டாலர் அளவிற்கும், 2020-21-ம் ஆண்டில் 393.41 மில்லியன் டாலர் அளவிற்கும், 2021-22 -ம் ஆண்டில் 709.72 மில்லியன் டாலர் அளவிற்கும், 2022-23-ம் ஆண்டில் 895.34 மில்லியன் டாலர் அளவிற்கும், 2023-24-ம் ஆண்டில் 608.31 மில்லியன் டாலர் அளவிற்கும் அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகம் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது பிரதமரின் வேளாண் மேம்பாட்டு  திட்டத்தின் கீழ் ஒரு அம்சமாகும். பண்ணை முதல் சந்தை வரை மதிப்புச் சங்கிலியில் உணவு பதனப்படுத்துதல் துறைக்கு நவீன உள்கட்டமைப்பை உருவாக்க இது பயன்படுகிறது.

நாட்டில் 25 மாநிலங்களில், பிரதமரின் வேளாண் மேம்பாட்டு திட்டத்தின் மிகப்பெரிய உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  இதில் தமிழ்நாட்டில் ஒரு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதும் உள்ளடங்கும்.

இத்தகவலை மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய உணவு பதனப்படுத்துதல் தொழில்கள் துறை இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டு தெரிவித்தார்.

PMKSY இன் MFP திட்டத்தின் கீழ் மாநில வாரியாக அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை

எஸ். எண்மாநிலம்/ யூனியன் பிரதேசங்கள்அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கை
1ஆந்திரப் பிரதேசம்3
2அருணாச்சல பிரதேசம்1
3அசாம்1
4பீகார்2
5சத்தீஸ்கர்1
6குஜராத்2
7ஹரியானா2
8ஹிமாச்சல பிரதேசம்1
9ஜம்மு & காஷ்மீர்1
10கர்நாடகா2
11கேரளா2
12மத்திய பிரதேசம்2
13மகாராஷ்டிரா3
14மணிப்பூர்1
15மேகாலயா1
16மிசோரம்1
17நாகாலாந்து1
18ஒடிசா2
19பஞ்சாப்3
20ராஜஸ்தான்2
21தமிழ்நாடு1
22தெலுங்கானா2
23திரிபுரா1
24உத்தரகாண்ட்2
25மேற்கு வங்காளம்1
 மொத்தம்41

நாட்டில் 25 மாநிலங்களில் மிகப்பெரும் உணவுப் பூங்கா திட்டத்தின் கீழ் 41 செயல்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta