அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். குடியரசுத் தலைவரின் உரை ஆழ்ந்த சிந்தனை கொண்டதாகும் என்று திரு மோடி பாராட்டினார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“அரசியலமைப்பு சட்ட தினத்தையொட்டி நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றேன். குடியரசுத் தலைவர், நமது அரசியலமைப்பின் முக்கியத்துவத்தையும், நாட்டின் முன்னேற்றத்தை வடிவமைப்பதில் அதன் பங்கையும் எடுத்துரைத்து ஒரு ஆழ்ந்த சிந்தனைமிக்க உரையை நிகழ்த்தினார்.”