பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு இன்று (30.10.2024) அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அவரது சிந்தனைகளையும், கருத்துகளையும் போற்றியுள்ள திரு நரேந்திர மோடி, அவர் எப்போதும் சமூகத்தை மேம்படுத்த பாடுபட்டார் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“பெரிதும் மதிக்கப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் குருபூஜையை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எண்ணற்ற மக்கள் அவரது எண்ணங்களில் இருந்தும் போதனைகளிலிருந்தும் வலிமை பெறுகிறார்கள். வறுமை ஒழிப்பு, ஆன்மிகம், விவசாயிகள் நலன் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நமது சமூகத்தை மேம்படுத்த அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது கனவை நனவாக்க நாம் தொடர்ந்து உழைப்போம்”.