கிட்ஹப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தாமஸ் டோம்கே கூறியதை பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கோள் காட்டியுள்ளார். உலகில் டெவலப்பர் நிபுணர்கள் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருவதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள தாமஸ் இந்தியா உலக தொழில்நுட்ப மையமாக வளர்வது தடுக்கமுடியாதது என்று கூறியுள்ளார்.
புதுமை மற்றும் தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்களின் சாதனைகளை திரு மோடி பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என்று வரும்போது, இந்திய இளைஞர்கள் தலைசிறந்தவர்களாக திகழ்கின்றனர்!”