Tue. Dec 24th, 2024

காலாட்படை தினத்தை முன்னிட்டு காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களது சேவைகளைப் பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“அயராது உழைத்து நம்மைப் பாதுகாக்கும் காலாட்படையின் அனைத்து பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும், இந்தக் காலாட்படை தினத்தில் அவர்களது அர்ப்பணிப்பு உணர்வுக்கும் தைரியத்திற்கும் நாம் அனைவரும் மரியாதை செலுத்துகிறோம். நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்து, எந்தவொரு துன்பத்தையும் எதிர்கொண்டு அவர்கள் எப்போதும் உறுதியுடன் நிற்கிறார்கள். காலாட்படை, வலிமை, வீரம், கடமை ஆகியவற்றின் அம்சங்களை உள்ளடக்கியது. இப்படை ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளிக்கிறது.”


காலாட்படை தினத்தை முன்னிட்டு, படையின் அனைத்துப் பிரிவு வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் பிரதமர் வாழ்த்து

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta