செஸ் தரவரிசையில் 2800 புள்ளிகளைக் கடந்ததற்காக இந்திய செஸ் கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களைப் பெருமைப்படுத்தியுள்ள அவரது அசாதாரண திறமையையும் விடாமுயற்சியையும் பாராட்டியுள்ள திரு நரேந்திர மோடி, இது மேலும் பல இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “சதுரங்க மதிப்பீட்டுப் புள்ளிகளில் 2800 புள்ளிகளைக் கடந்த அர்ஜுன் எரிகேசிக்கு வாழ்த்துக்கள்! இது ஒரு தனித்துவமான சாதனை. அவரது தனித்துவமான திறமையும் விடாமுயற்சியும் நமது ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்படுத்துகிறது. இது தனிப்பட்ட முறையில் அவருக்கு ஒரு பெரிய மைல்கல்லாக இருப்பதோடு, மேலும் பல இளைஞர்கள் செஸ் விளையாட்டில் ஈடுபடம், உலக அரங்கில் பிரகாசிக்கவும் ஊக்கமளிக்கும். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துகள்”.