Tue. Dec 24th, 2024

பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 அக்டோபர் 19 அன்று புதுதில்லியில் கர்மயோகி வாரத்தைத் தொடங்கி வைத்தார். தேசிய கற்றல் வாரமானது தொடர்ந்து வேகம் பெற்று வரும் நிலையில், இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள முன்னோடிகள், அறிவு மற்றும் வளர்ச்சியின் எல்லைகளை விரிவுபடுத்த ஆர்வமுள்ள இந்திய கற்பவர்களுடன் ஒன்றிணைந்துள்ளனர். கர்மயோகி இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த துடிப்பான முன்முயற்சி, நவீன நிர்வாகத்தின் சவால்களை எதிர்கொள்ள குடிமைப் பணியாளர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது.

தேசிய கற்றல் வாரத்தின்  முதல் நான்கு நாட்களின் முக்கிய சாதனைகள்:

ஐ.ஜி.ஓ.டி தளத்தில் 7,50,000 க்கும் மேற்பட்ட படிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளன:

வெறும் நான்கு நாட்களில், ஐ.ஜி.ஓ.டி  தளத்தில் 7,50,000 க்கும் மேற்பட்ட படிப்புகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்ச்சியான கற்றல் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான இந்தியாவின் உந்துதலைக் காட்டுகிறது. பொது சேவையில் தேவைகளை மேம்படுத்துவதற்கும், முன்னோக்கிச் செல்வதற்கும் அரசு ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள  அர்ப்பணிப்பை பங்கேற்பின் எழுச்சி பிரதிபலிக்கிறது.

33 அமைச்சகங்கள், “குழு விவாதத்தில்” ஈடுபட்டன:

ஒத்துழைப்பு மற்றும் கூட்டு கற்றலை ஊக்குவிக்கும் ‘குழு விவாதத்தில்’ 33 அமைச்சகங்கள் பங்கேற்றது  முக்கிய சிறப்பம்சமாகும். பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையில் இந்த விவாதம் பிரதமர் அலுவலகத்திலும் நடைபெற்றது.  மிகவும் சுறுசுறுப்பான, பதிலளிக்கக்கூடிய நிர்வாகத்தை உருவாக்க மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை இதில் வலியுறுத்தப்பட்டது. நாட்டின்  வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதில் பகிரப்பட்ட அறிவு சார்ந்த கருத்துக்களின் முக்கியத்துவத்தை இந்த அமர்வு அடிக்கோடிட்டுக் காட்டியது.

9 தொலைநோக்கு சிந்தனை கொண்ட பேச்சாளர்கள்  மாற்றம் ஏற்படுத்தும் வலைத்தள கருத்தரங்கை  நடத்தினார்கள்:

நந்தன் நிலேகனி, ராகவ கிருஷ்ணா மற்றும் புனித் சந்தோக் போன்ற செல்வாக்குமிக்க சிந்தனைத் தலைவர்கள், முக்கியமான தலைப்புகளில் உலகளாவிய கண்ணோட்டங்களைப் பகிர்ந்துகொண்டு, ஊக்கமளிக்கும் வலைத்தள கருத்தரங்கை  நடத்தினார்கள். இந்த அமர்வுகள் புதிய யோசனைகளைத் தூண்டியதுடன், இந்திய நிர்வாக  சூழலின் சிக்கல்களைச் சமாளிக்க புதுமையான அணுகுமுறைகளையும்   முன்வைத்தன.

இந்த தேசிய கற்றல் வாரம், அரசு ஊழியர்களுக்கு அல்லது ‘கர்மயோகிகளுக்கு’  பிரகாசமான மற்றும் கூடுதல் அதிகாரம் பெற்ற இந்தியாவை உருவாக்கத் தேவையான திறன்களை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் வாழ்நாள் முழுவதும் கற்பதால், அவர்கள் மிகவும் ஆற்றல்மிக்க, பயனுள்ள மற்றும் முன்னோக்கு சிந்தனை கொண்ட நிர்வாக கட்டமைப்பிற்கு பங்களிக்கிறார்கள்.


கர்மயோகி வாரம்: முக்கிய மைல்கற்கள்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta