டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமரின் தைரியமான தொலைநோக்குப் பார்வையை தொழில்துறை தலைவர்கள் பாராட்டியதுடன், சீர்திருத்தங்கள், புதுமைப் படைப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றில் அரசின் ஆதரவையும் பாராட்டினர்
டிஜிட்டல் ஆளுகைக்கான உலகளாவிய கட்டமைப்பின் அவசியத்தை தொழில்துறை தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற, சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) 2024-ல் இந்தியா மொபைல் காங்கிரஸின் 8-வது பதிப்பை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (WTSA) என்பது ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்பாடு செய்யப்படும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களுக்கான ஐக்கிய நாடுகளின் நிறுவனமான சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் தரப்படுத்தல் பணிக்கான மாநாடு ஆகும். இந்தியா மற்றும் ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் – உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் பேரவை (ITU-WTSA) நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மற்றும் தொலைத் தொடர்பு தொழில்நுட்பத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை ஒன்றிணைத்த ஒரு முக்கிய உலகளாவிய நிகழ்வு இதுவாகும்.
ரிலையன்ஸ் ஜியோ-இன்போகாம் லிமிடெட் தலைவர் திரு ஆகாஷ் அம்பானி பேசுகையில், இந்தியாவின் குறிப்பிடத்தக்க டிஜிட்டல் மாற்றத்திற்கு ஊக்கமளித்த பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமைக்கு பாராட்டு தெரிவித்தார். மூன்றாவது பதவிக்காலத்தில், டிஜிட்டல் துறையில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை ஏற்படுத்தி, புதுமை மற்றும் ஒத்துழைப்புக்கான குறிப்பிடத்தக்க தளமாக இந்திய மொபைல் காங்கிரஸை (ஐஎம்சி) திரு மோடி நிலைநிறுத்தியுள்ளதாக அவர் கூறினார். 2ஜி வேகத்தில் போராடும் தேசத்திலிருந்து உலகின் மிகப்பெரிய தரவு சந்தையாக இந்தியா மாறியுள்ளது என்று திரு அம்பானி குறிப்பிட்டார். மொபைல் பிராட்பேண்ட் தத்தெடுப்பில் 155-வது இடத்திலிருந்து தற்போதைய நிலைக்கு இந்தியாவின் பயணம் அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையிலான ஒருங்கிணைப்பின் சக்தியை நிரூபிப்பதாக அவர் வலியுறுத்தினார். ஜன் தன் கணக்குகள் போன்ற முன்முயற்சிகள் மூலம், வங்கிச் சேவை பெறாத 53 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் சேர்க்கப்பட்டுள்ளதையும், அதில் கணிசமானவர்கள் பெண்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். “கண்டுபிடிப்புக்கான மோடி-யின் அர்ப்பணிப்பு, தொழில்நுட்பம் நம் நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடைவதை உறுதி செய்துள்ளது, யாரையும் பின்தங்க விடாது” என்று திரு அம்பானி கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த இந்தியாவை இலக்காகக் கொண்டு, பல்வேறு துறைகளில் ஒரு உருமாறும் கருவியாக செயற்கை நுண்ணறிவை (AI) மேம்படுத்துவதை அவர் முன்மொழிந்தார். மேலும் இந்திய தரவை நாட்டிற்குள் தக்கவைத்துக் கொள்வதற்கும், வலுவான செயற்கை நுண்ணறிவை சுற்றுச்சூழல் அமைப்பை வளர்ப்பதற்கும் தரவு மையக் கொள்கையில் புதுப்பிப்புகளை வலியுறுத்தினார்.
டிஜிட்டல் இந்தியாவுக்கான பிரதமர் திரு. நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை சுட்டிக்காட்டிய பாரதி ஏர்டெல் நிறுவனர் மற்றும் தலைவர் திரு சுனில் பார்தி மிட்டல், இந்தியாவின் தொலைத் தொடர்புப் பயணத்தை விவரித்தார். தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய முன்னேற்றத்தை வலியுறுத்தினார். “உண்மையான மாற்றம் 2014-ல் பிரதமர் மோடியின் ‘டிஜிட்டல் இந்தியா’ என்ற பார்வையுடன் தொடங்கியது, இது 4 ஜி புரட்சியைத் தூண்டியது. இது நமது கிராமப்புறங்களில் உள்ளவர்கள் உட்பட, மில்லியன் கணக்கானவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் அத்தியாவசிய டிஜிட்டல் சேவைகளை அணுக அதிகாரம் அளித்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தின் உருமாறும் தாக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார், இது ஸ்மார்ட்போன்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை கிராமப்புறங்கள் உட்பட மில்லியன் கணக்கானவர்களுக்கு கொண்டு வந்துள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டத்தின் மூலம், உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதற்கான அரசின் முயற்சிகளை அவர் நினைவு கூர்ந்தார். இந்தியாவை தொலைத் தொடர்பு உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக நிலைநாட்டியுள்ளார். “இறக்குமதியை நம்பியிருப்பதைக் குறைக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பி.எல்.ஐ) திட்டம் போன்ற முயற்சிகளுடன், இந்தியாவை தொலைத்தொடர்பு உபகரணங்களுக்கான உற்பத்தி மையமாக மாற்றுகிறோம், “என்று அவர் குறிப்பிட்டார். எதிர்கால லட்சியங்களைப் பற்றி விவாதித்த மிட்டல், அடுத்த 12 முதல் 18 மாதங்களுக்குள், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் விரிவான வெளியீடுகளுடன் 5 ஜி தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னணியில் இருக்கும் என்று அறிவித்தார். குறைவான புவி சுற்றுப்பாதை (எல்.இ.ஓ) நெட்வொர்க்குகளின் திறனையும் அவர் விவாதித்தார், “இந்த நெட்வொர்க்குகள் நமது மிகவும் சவாலான நிலப்பரப்புகளில் இணைப்பு இடைவெளியைக் குறைக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் வேகமான இணைய சேவைகளை அணுகுவதை உறுதி செய்யும்.”
ஆதித்ய பிர்லா குழுமத்தின் தலைவர் திரு குமார் மங்கலம் பிர்லா, டிஜிட்டல் இணைப்பின் முக்கியத்துவத்தை தொடர்ந்து அங்கீகரிப்பதற்கும், இந்தியாவை அதிக இணைப்புக் கொண்ட, அதிகாரமளிக்கப்பட்ட மற்றும் உள்ளடக்கிய டிஜிட்டல் தேசத்தை நோக்கி கொண்டு செல்ல பல ஆண்டுகளாக பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும், அரசின் உறுதியான ஆதரவை எடுத்துரைத்தார். டிஜிட்டல் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும், மக்களுக்கும் வணிகங்களுக்கும் டிஜிட்டல் தத்தெடுப்பை சமமாக விரைவுபடுத்துவதற்கும் அரசின் தொடர்ச்சியான உந்துதலைப் பாராட்டினார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு அதிகபட்ச ஆதரவு அளிப்பது என்று பொருள்படும் என்ற பிரதமரின் மேற்கோளை நினைவுகூர்ந்த திரு பிர்லா, இந்தியாவின் சிறு தொழில்களுக்கு டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதன் மூலம், அதிகபட்ச ஆதரவை வழங்க தாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றும், அவை எதிர்காலத்திற்கு உகந்தவை என்றும் கூறினார். 5G, IoT, AI மற்றும் கிளவுட் சேவைகள் போன்ற தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவதற்கு முக்கியத்துவம் அளித்த அவர், இந்தியாவின் எம்எஸ்எம்இ-களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அதிகாரம் அளிக்கும் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார். தொலை மருத்துவத்தில் 10 கோடி தொலைத்தொடர்பு ஆலோசனைகள் என்ற குறிப்பிடத்தக்க சாதனையை இந்தியா சாதித்துள்ளது என்று தெரிவித்த அவர் , இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விஷயம் என்றார். கடந்த ஆண்டில் அரசின் ஒழுங்குமுறை மற்றும் தொழில்துறையால் தீர்க்கப்பட்ட மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றை சுட்டிக்காட்டிய திரு பிர்லா, ஸ்பேம் கட்டுப்பாடு மற்றும் மோசடி பாதுகாப்பு ஆகியவற்றையும் எடுத்துரைத்தார். இந்திய தொலைத் தொடர்புத் துறையின் வாய்ப்புகள் குறித்த பிரதமரின் பேச்சை நினைவு கூர்ந்த அவர், டிஜிட்டல் இந்தியா குறித்த பிரதமரின் துணிச்சலான தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டினார். அரசின் தொடர்ச்சியான ஆதரவுடன், அவர்கள் தங்கள் பங்களிப்பை மேற்கொள்வார்கள் என்றும், பிரதமரின் டிஜிட்டல் இந்தியா இலக்கை நனவாக்க உதவுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த ஆண்டை உண்மையிலேயே சிறப்பானதாக மாற்றிய அரசு, பங்குதாரர்கள் மற்றும் ஒட்டுமொத்த தொலைத் தொடர்பு சமூகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
2024 உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் சபை மற்றும் இந்தியா மொபைல் காங்கிரஸ் ஆகியவற்றின் போது, பிரதமருடன் கூட்டாக விழாவில் கலந்து கொள்வது ஒரு பெரிய கவுரவம் என்று ஐடியு பொதுச் செயலாளர் திருமதி டோரீன் போக்டன் மார்ட்டின் குறிப்பிட்டார். இது ஐடியு மற்றும் இந்தியாவுக்கு இடையிலான ஆழமான உறவுகளின் சக்திவாய்ந்த அடையாளமாகும் என்று கூறிய அவர், கடந்த ஆண்டு ஐடியு பகுதி அலுவலகம் மற்றும் கண்டுபிடிப்பு மையத்தை திறந்து வைத்தபோது, பிரதமருடன் மேற்கொண்ட பயனுள்ள உரையாடலை நினைவு கூர்ந்தார். சில வாரங்களுக்கு முன்பு நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி, எதிர்கால ஒப்பந்தம் மற்றும் அதன் உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டது பற்றி அவர் பேசினார். அங்கு டிஜிட்டல் எதிர்காலம் குறித்து, உலகிற்கு ஒரு சக்திவாய்ந்த செய்தி அனுப்பப்பட்டது. உலகளாவிய டிஜிட்டல் ஆளுகையின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியதை நினைவு கூர்ந்த அவர், முன்னுதாரணமாக வழிநடத்தவும், அதன் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை ஒட்டுமொத்த உலகுடனும் பகிர்ந்து கொள்ள தயார் என்ற இந்தியாவின் லட்சியத்தை அவர் எவ்வாறு தெளிவுபடுத்தினார் என்பதையும் எடுத்துரைத்தார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமை வகித்த போது, டிபிஐக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய திருமதி போக்டன் மார்ட்டின், ஐடியு ஒரு அறிவுசார் பங்குதாரராக மாறுவதில் மகிழ்ச்சி தெரிவித்தார். ஒருங்கிணைந்த பணப்பட்டுவாடா இடைமுகம் தொடர்பாக, இந்தியாவின் சாதனைகளிலிருந்து உலகம் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். தரநிலைகள் நம்பிக்கையை உருவாக்குகின்றன என்றும், அவை அத்தகைய தளங்களை இயக்கும் இயந்திரமாகும், அவை அளவில் செயல்பட அனுமதிப்பதோடு மொபைல் சாதன அணுகல் மூலம், ஒவ்வொரு இந்தியருக்கும் வாழ்க்கை நிலையை மாற்றும் சேவைகளை வழங்குகின்றன என்றும் அவர் வலியுறுத்தினார். நம்பிக்கை உள்ளடக்கத்தை ஏற்படுத்துவதோடு, இந்த உள்ளடக்கத்தால், அனைவருக்கும் டிஜிட்டல் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் முழு திறனையும் வெளிப்படுத்த முடியும். மனிதகுலத்தின் மூன்றில் ஒரு பங்கு இன்னும் ஆஃப்லைனில் உள்ளது என்று திருமதி போக்டன் மார்ட்டின் மேலும் கூறினார். ஆசியாவில் இதுபோன்ற முதல் சந்திப்பு இது என்று குறிப்பிட்ட அவர், தைரியமான கூட்டு நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்தார். அடுத்த 10 நாட்களில், உலகளாவிய டிஜிட்டல் ஆளுகையின் அடித்தளமாக சர்வதேச தரத்தின் பங்கை வலுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் நெறிமுறை பயன்பாட்டை நினைவு கூர்ந்த அவர், தொழில்நுட்ப முன்னேற்றத்தை டிஜிட்டல் உள்ளடக்கத்துடன் சீரமைக்கவும் வலியுறுத்தினார்.