Sun. Apr 13th, 2025

விவசாயிகளின் வாழ்வில் முன்னேற்றத்தைக் கொண்டுவர விதை முதல் சந்தை வரை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் எழுதிய கட்டுரை குறித்து சமூக ஊடக எக்ஸ் வலைதளத்தில் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளதாவது:

நாடு முழுவதும் உள்ள விவசாய சகோதர சகோதரிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர எங்கள் அரசு உறுதிபூண்டுள்ளது. வேளாண் அமைச்சர் @ChouhanShivraj அவர்களின் இந்தக் கட்டுரை, விதை முதல் சந்தை வரை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் எவ்வாறு மேற்கொள்கிறோம் என்பதைக் காட்டுகிறது”.

விவசாயிகளின் நலனுக்காக தமது அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுடனான தமது சந்திப்பு மறக்க முடியாத அனுபவம் என்று திரு மோடி கூறியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

விவசாயிகள் நலனில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது. இந்த வகையில், உணவு உற்பத்தியாளர்களைச் சந்தித்த அனுபவம் மறக்க முடியாததாக மாறியுள்ளது.”


விவசாயிகளின் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் கொண்டுவர விதை முதல் சந்தை வரை சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta