யானைகள் நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் தொடர்புடையவை: பிரதமர்
உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளைப் பாதுகாக்க மேற்கொள்ளப்படும் பல்வேறு சமூக முயற்சிகளை பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். யானைகள் செழித்து வளர உகந்த வாழ்விடத்தை உறுதி செய்ய சாத்தியமான அனைத்தையும் வழங்குவதற்கான உறுதிப்பாட்டையும் திரு மோடி மீண்டும் தெரிவித்துள்ளார்.
யானைகளின் மதிப்பையும், நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றில் அவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“உலக யானைகள் தினம் என்பது யானைகளைப் பாதுகாப்பதற்கான பரந்த அளவிலான சமூக முயற்சிகளைப் பாராட்டும் ஒரு சந்தர்ப்பமாகும். அதே நேரத்தில், யானைகளுக்கு அவை செழித்து வளர்வதற்கு உகந்த வாழ்விடத்தைப் பெறுவதை உறுதி செய்ய நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கான உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்தியாவில் யானை என்பது நமது கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடனும் இணைக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சியளிக்கிறது.”