Tue. Dec 24th, 2024

பாரிஸ்  ஒலிம்பிக்- 2024-ல் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கௌரவித்துப் பாராட்டினார்.

இந்திய அணியின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பை அமைச்சர் பாராட்டினார். உலக அரங்கில் அவர்களின் சிறந்த செயல்திறன் முழு தேசத்தையும் பெருமை கொள்ள வைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“உங்கள் சாதனையால் முழு தேசமும் பெருமிதம் கொள்கிறது” என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார். “இந்த வெற்றி உங்கள் விடாமுயற்சி, குழு செயல்பாடு ஆகியவற்றுக்கு ஒரு சான்றாகும். நீங்கள் இந்தியாவுக்கு மகத்தான பெருமையைக் கொண்டு வந்துள்ளீர்கள். பல லட்சக்கணக்கான இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் கனவுகளைத் தொடர ஊக்குவித்துள்ளீர்கள்,”என்று அமைச்சர் ஒலிம்பிக் ஹாக்கி வீரர்களிடம் மேலும் கூறினார்.

பயிற்சியாளர், இந்திய குழுவின் அயராத முயற்சிகளை மத்திய அமைச்சர் பாராட்டினார். அணியின் வெற்றியில் அவர்களின் முக்கிய பங்கை அவர் அங்கீகரித்துப் பேசினார். இந்தியாவில் ஹாக்கியை மேலும் மேம்படுத்துவதற்கும், நாட்டின் விளையாட்டு திறமைகளை வளர்ப்பதற்கும் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்தார்.

“ஹாக்கி நமக்கு ஒரு விளையாட்டு மட்டுமல்ல. இது நமது தேசிய பெருமையின் சின்னம். அணியின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஆர்வம் இந்த வரலாற்று வெற்றிக்கு வழிவகுத்துள்ளது. உறுதியுடன் வெற்றியை அடைய முடியும் என்பதை நீங்கள் உலகுக்குக் காட்டியுள்ளீர்கள்” என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, தொடர்ந்து பாடுபடுமாறும், எதிர்காலத்தில் இன்னும் பெரிய சாதனைகளை நோக்கி தங்கள் இலக்கை நிர்ணயிக்குமாறும் அவர்களை ஊக்குவித்தார்.


பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணியை மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா கௌரவித்தார்

You missed

 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta