2024, ஜூலை 31 அன்று ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவின் போது ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு நன்கொடையாளர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தின் செயல்பாடுகளை செயல்படுத்துவதற்கான நிதி விதிமுறைகளை விளக்கும், இந்த ஒப்பந்தத்தில், ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திரு அரிந்தம் பக்சி, உலக சுகாதார அமைப்பு சார்பில் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் ஆயுஷ் உதவி இயக்குநர் ஜெனரல் டாக்டர் புரூஸ் அய்ல்வார்ட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஆயுஷ் செயலாளர் வைத்யா ராஜேஷ் கொடேச்சா இந்த நிகழ்வில் மெய்நிகர் முறையில் பங்கேற்றார்.
இந்த ஒத்துழைப்பின் மூலம், இந்தியாவின் குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தின் (GTMC) செயல்பாடுகளை ஆதரிப்பதற்காக இந்திய அரசு 10 ஆண்டு காலத்திற்கு (2022-2032) 85 மில்லியன் அமெரிக்க டாலர்களை நன்கொடையாக வழங்கும். ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சான்றுகள் அடிப்படையிலான பாரம்பரிய மருத்துவத்திற்கான (TCIM) முக்கிய அறிவு மையமாக WHO உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை நிறுவுவதை நன்கொடையாளர் ஒப்பந்தம் அங்கீகரிக்கிறது.