இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் 56-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்து கொள்கிறார்
இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனம் (ஐ.ஐ.எம்.சி) தமது 56-வது பட்டமளிப்பு விழாவை 2025 மார்ச் 4 அன்று புதுதில்லியில் உள்ள மகாத்மா காந்தி மஞ்ச்சில் நடத்த உள்ளது. இந்திய மக்கள் தொடர்பியல் நிறுவனத்தின் வேந்தரும், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு, ரயில்வே,…
உலக வன உயிரின தினமான இன்று, கம்பீரமான ஆசிய சிங்கத்தின் தாயகமான கிர் நகர் உயிரினப் பூங்காவை பார்வையிடச் சென்றேன்; குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மேற்கொண்ட பணிகள் நினைவுக்கு வருகின்றன: பிரதமர்
கடந்த பல ஆண்டுகளில், மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சிகள் ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை சீராக அதிகரித்து வருவதை உறுதி செய்துள்ளன; ஆசிய சிங்கத்தின் வாழ்விடத்தைப் பாதுகாப்பதில் பழங்குடியின சமூகத்தினர், சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பெண்களின் பங்களிப்பு பாராட்டத்தக்கது: பிரதமர் கம்பீரமான தோற்றம் கொண்ட…
ஒரே மாதிரியான இபிஐசி எண் என்பதற்கு போலி வாக்காளர்கள் என பொருள் அல்ல – தேர்தல் ஆணையம் விளக்கம்
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே மாதிரியான எண் கொண்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) தொடர்பான பிரச்சினை குறித்த சில சமூக ஊடக பதிவுகள், ஊடக செய்திகளைத் தேர்தல் ஆணையம் அறிந்துள்ளது. சில வாக்காளர்களின் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள…
புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
புனிதமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த புனிதமான நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: “ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கியுள்ள…
என்எக்ஸ்டி மாநாட்டில் முக்கிய பிரமுகர்களை பிரதமர் சந்தித்து உரையாடினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புதுதில்லி பாரத மண்டபத்தில் உள்ள என்எக்ஸ்டி மாநாட்டில் பல்வேறு முக்கிய பிரமுகர்களை சந்தித்து உரையாடினார். இந்தப் பிரமுகர்கள் பட்டியலில் திரு. கார்லோஸ் மான்டெஸ், பேராசிரியர் ஜொனாதன் ஃப்ளெமிங், டாக்டர் ஆன் லிபர்ட், பேராசிரியர். வெசெலின்…
உலக மொபைல் மாநாடு -2025 ல், உலக அரங்கில் இந்தியாவின் எழுச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் திரு ஜோதிராதித்ய சிந்தியா
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் மார்ச் 3-6, 2025 வரை நடைபெறவுள்ள உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு நிகழ்வுகளில் ஒன்றான, உலக மொபைல் மாநாடு- 2025 -ல், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா,…
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி பேசியதன் தமிழாக்கம் (பிப்ரவரி 28, 2025)
ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் அவர்களே, பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே, வணக்கம்! ஐரோப்பிய ஆணையத்தின் தலைவரின் இந்திய வருகை முன்னெப்போதும் இல்லாத வகையில் முதல் முறை வருகையாகும். இது ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் மட்டுமல்ல. ஒரு நாட்டில்…
விவசாயம் மற்றும் கிராமப்புற வளமை குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய காணொலிக் கருத்தரங்கம் நாளை நடைபெறுகிறது- பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றுகிறார்
மத்திய வேளாண் அமைச்சகம் “வேளாண்மை மற்றும் கிராமப்புற வளமை” என்ற தலைப்பில் பட்ஜெட்டுக்குப் பிந்தைய ஒருநாள் இணையவழிக் கருத்தரங்கை நாளை (01.03.2025) நடத்துகிறது. இதில், பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை பிற்பகல் 12:30 மணிக்கு காணொலி மூலம் முக்கிய உரை…
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
தேசிய அறிவியல் தினத்தையொட்டி அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது; “அறிவியல் மீது ஆர்வம் கொண்டுள்ள, குறிப்பாக நமது இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கு தேசிய அறிவியல் தின வாழ்த்துகள். அறிவியலையும்,…
இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை ஏற்பாடு செய்திருந்த ‘பாரத் அழைப்பு மாநாடு 2025’-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்
மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை(ஐஎம்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) ஏற்பாடு செய்திருந்த ‘பாரத் அழைப்பு மாநாடு 2025’-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். ‘வளர்ச்சியடைந்த இந்தியா…