Sat. Apr 12th, 2025

புனிதமான ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் திரு நரேந்திர மோடி இந்த புனிதமான நன்னாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஆசீர்வதிக்கப்பட்ட ரமலான் மாதம் தொடங்கியுள்ள நிலையில், இது நமது சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரட்டும். இந்த புனித மாதம், நன்றியுணர்வையும் இறை உணர்வையும் உருவகப்படுத்துகிறது. மேலும் இரக்கம், கருணை, சேவை ஆகியவற்றின் மதிப்புகளையும் இது நமக்கு நினைவூட்டுகிறது.

ரம்ஜான் முபாரக்!”


புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta