மும்பையில் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் சபை(ஐஎம்சி சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி) ஏற்பாடு செய்திருந்த ‘பாரத் அழைப்பு மாநாடு 2025’-ஐ மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று தொடங்கி வைத்தார். ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047-க்கான பாதை: அனைவருக்குமான செழுமை’ என்ற தலைப்பில் நடைபெற்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் முதன்மைப் பேச்சாளராக இருந்தார். பல்வேறு துறைகளில் முதலீடு செய்வதற்கான இணையற்ற வாய்ப்புகளை வழங்கி, உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா எவ்வாறு முன்னணியில் நிற்கிறது என்பதை இந்த மாநாடு எடுத்துக்காட்டுகிறது. வலுவான மற்றும் நெகிழ்திறன் கொண்ட பொருளாதாரம், பெரிய மற்றும் துடிப்பான நுகர்வோர் சந்தை மற்றும் வர்த்தகத்திற்கு உகந்த கொள்கைகளை வளர்ப்பதில் உறுதிபூண்டுள்ள அரசு ஆகியவற்றுடன், உலகின் முன்னணி முதலீட்டு இடங்களில் ஒன்றாக இந்தியா மாறத் தயாராக உள்ளது.

இக்கூட்டத்தில் முக்கிய உரையாற்றிய திரு பியூஷ் கோயல், 1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன என்றும், அவர்களில் பலர் ஆர்வமுள்ள இளைஞர்கள் என்றும் கூறினார். பிரதமரே பரிந்துரைத்தபடி, உற்பத்தி, திறன் மேம்பாடு, புதிய கணடுபிடிப்பு ஆகியவற்றில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு உள்ளது என்றும், இது உண்மையிலேயே இந்தியாவை உலகின் வளர்ந்து வரும் முதலீட்டு இடமாக மாற்றுகிறது என்றும் அவர் தெரிவித்தார். வளமான மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நாங்கள் கூட்டாக உறுதிபூண்டுள்ளோம் என்று அவர் மேலும் கூறினார்.
சர்வதேச வர்த்தகத்திற்கு தனது வணிகத்தை அனுமதிக்காவிட்டால் இந்தியா வளர்ந்த நாடாக மாற முடியாது என்று அமைச்சர் திரு கோயல் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2106609