பயிற்சி முடித்து திருவாரூர் மாவட்டத்தில் அறிக்கை செய்த காவல் ஆளினர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து கூறினார்கள்.
காவலர் அடிப்படை பயிற்சி முடித்து இன்று (01.02.2024) திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் புதிதாக 240 – காவலர்கள் பணிக்கு அறிக்கை செய்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் நேரில் சென்று புதிதாக பணிக்கு அறிக்கை செய்த காவலர்களுக்கு ஆயுதப்படையில் வழங்கப்படும் பணிகள் குறித்தும், பணியின் முக்கியத்துவம் குறித்தும், பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக்கூறினார்கள்.
அப்போது திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்திரமோகன் அவர்கள் உடனிருந்தார்கள்.