2025 பிப்ரவரி 22 முதல் 24 வரை நடைபெற்ற பூசா கிருஷி விக்யான் மேளாவில் ஏழு முக்கிய வேளாண் பயிர்கள், 11 பழங்கள் மற்றும் 31 காய்கறிகளில் மொத்தம் 79 புதிய உயர் விளைச்சல் வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. இது தவிர, 18 உயிர் உரங்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
பருவநிலை தாங்குதிறன் விவசாயத்திற்கான தொழில்நுட்பங்கள்; மாற்றுப்பயிர்; டிஜிட்டல் விவசாயம்; வேளாண் விற்பனை மற்றும் ஏற்றுமதி போன்றவை தொடர்பான அமர்வுகளும் இடம் பெற்றன.
விவசாயிகள், தொழில்முனைவோர், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு புதிய ரகங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு பகீரத் சௌத்ரி இந்தத் தகவலைத் தெரிவித்தார்.