Sat. Apr 12th, 2025

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்தார். 300 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதாரக் குழுவை இந்தியாவிற்கு வழிநடத்தி வந்துள்ள அவரது முயற்சியைப் பிரதமர் பாராட்டியுள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:

“பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்ததில் மகிழ்ச்சி. 300 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதாரக் குழுவை இந்தியாவிற்கு வழிநடத்தி வந்துள்ள அவரது முயற்சியை மிகவும் பாராட்டுகிறோம். வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம், வாழ்க்கை அறிவியல், புத்தாக்கம், திறன் மற்றும் கல்வி பரிமாற்றங்களில் புதிய கூட்டாண்மைகள் மூலம் நமது மக்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகள் உருவாவதை எதிர்நோக்கியுள்ளோம்.”


பிரதமர் பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்தார்
 - 
English
 - 
en
Hindi
 - 
hi
Tamil
 - 
ta