பரிக்ஷா பே சர்ச்சா 2025-ன் ஐந்தாவது பகுதியில் சத்குரு பங்கேற்பு
பரிக்ஷா பே சர்ச்சா 2025, புதிய, மிகவும் கவர்ச்சிகரமான வடிவத்தில், நாடு முழுவதும் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரிடமிருந்து மகத்தான பாராட்டுக்களைப் பெற்று வருகிறது! பாரம்பரிய வடிவமைப்பிலிருந்து விலகி, எட்டாவது பதிப்பு 2026 பிப்ரவரி 10 அன்று புதுதில்லியில் பசுமையான தோட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் மாணவர்களின் கலந்துரையாடல் அமர்வு நடைபெற்றது.
முதல் பகுதியில், நாடு முழுவதிலும் இருந்து 36 மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார். கருத்தில் கொள்ள வேண்டிய தலைப்புகளைப் பற்றி அவர் பேசினார். ஊட்டச்சத்து, ஆரோக்கியம், அழுத்தத்தை கட்டுப்படுத்துதல், தலைமைத்துவ கலை, புத்தகங்களுக்கு அப்பால் வளர்ச்சி, நேர்மறைகளைக் கண்டறிதல் என பலவற்றைப் பற்றி பிரதமர் எடுத்துரைத்தார். இந்த அமர்வு மாணவர்களுக்கு நடைமுறை கல்வி சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கான பயனுள்ள உத்திகளை வழங்கியது.
விளையாட்டு வீரர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், போட்டித் தேர்வில் முதலிடம் பெற்றவர்கள், பொழுதுபோக்கு வல்லுநர்கள், ஆன்மீகத் தலைவர்கள் போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டு, பாடப்புத்தகங்களைத் தாண்டிய அறிவை மாணவர்களுக்கு வழங்கி வருகின்றனர்.
ஐந்தாவது பகுதியில், சத்குரு தேர்வுகளின் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு மட்டுமல்லாமல், வாழ்க்கையில் பல்வேறு சவால்களை சமாளிக்கவும் நினைவாற்றலின் முக்கியத்துவத்தையும் விளக்கினார். மாணவர்களிடையே திறந்த சூழலில், அவர் வெளிப்படையாகப் பேசி, ஆழமான நுண்ணறிவுகளை வழங்கினார். தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை நிர்வகிக்க மாணவர்களுக்கு உதவ இந்த முயற்சியைத் தொடங்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
2025 பிப்ரவரி 12 அன்று, பிரபல நடிகை தீபிகா படுகோனே பரிக்ஷா பே சர்ச்சாவின் 8- வது பதிப்பின் இரண்டாம் பாகத்தில் சுமார் 60 பேருடன் உரையாடினார். மனநல சவால்களை சமாளிப்பது எவ்வாறு அதிகாரம் அளிக்கும் என்பதைப் பற்றி தீபிகா பேசினார், மேலும் தனது சொந்த போராட்டங்களிலிருந்து கற்றுக்கொண்ட மதிப்புமிக்க பாடங்களைப் பற்றி பேசினார்.
2025 பிப்ரவரி 13, அன்று, டெக் குருஜி என்று பிரபலமாக அறியப்படும் கௌரவ் சவுத்ரி, எடெல்வைஸ் மியூச்சுவல் ஃபண்டின் தலைமைச் செயல் அதிகாரி ராதிகா குப்தா ஆகியோர் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றலின் அடிப்படைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர்.
2025 பிப்ரவரி 14, அன்று முன்னணி ஊட்டச்சத்து நிபுணர்களான சோனாலி சபர்வால், ருஜுதா திவேகர், ரேவந்த் ஹிம்மத்சிங்கா ஆகியோர் ஆரோக்கியமாகவும் மன அழுத்தமின்றியும் இருப்பதில் ஊட்டச்சத்தின் முக்கிய பங்கு குறித்து மாணவர்களுடன் பேசினர்.
முதல் பகுதியைப் பார்க்க யூடியூப் தள இணைப்பு:
https://www.youtube.com/watch?v=G5UhdwmEEls
2-வது பகுதியைப் பார்க்க யூடியூப் தள இணைப்பு:
https://www.youtube.com/watch?v=DrW4c_ttmew
3-வது பகுதியைப் பார்க்க யூடியூப் தள இணைப்பு:
https://www.youtube.com/watch?v=wgMzmDYShXw
4-வது பகுதியைப் பார்க்க யூடியூப் தள இணைப்பு:
https://www.youtube.com/watch?v=3CfR4-5v5mk
5-வது பகுதியைப் பார்க்க யூடியூப் தள இணைப்பு:
https://www.youtube.com/watch?v=3GD_SrxsAx8