தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் (NFDP) மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போர் பதிவு செய்துகொள்ள நாடு தழுவிய அளவில் ஒரு சிறப்பு பிரச்சாரத்திற்கு மீன்வளத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
பிரதமரின் மீன் விவசாயிகள் நல ஆதரவுத் திட்டத்தின் (PMMKSSY) கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு தகுதியானவர்களிடம் இருந்து பிப்ரவரி 14 முதல் 22, 2025 வரை விண்ணப்பங்களைப் பெறுதல் குறித்து இந்தப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
மாநில/யூனியன் பிரதேச மீன்வளத் துறைகள், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) மற்றும் பொது சேவை மையங்கள் (CSCs) ஆகியவற்றுடன் இணைந்து, நாடு தழுவிய அளவில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடன் வசதி, மீன்வளர்ப்பு காப்பீடு மற்றும் மானியங்கள் போன்ற ஏராளமான நன்மைகளைப் பெறுவதற்கு தகுதியான மீன்விவசாயிகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை பிரதமரின் மீன் விவசாயிகள் நல ஆதரவுத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மீனவர்கள், மீன் விவசாயிகள், விற்பனையாளர்கள், பதப்படுத்துபவர்கள், போன்றவர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் பயனடைய இந்த முகாம்களில் பங்கேற்று தேசிய மீன்வள டிஜிட்டல் தளத்தில் தங்களைக் குறித்து பதிவு செய்து கொள்ளலாம். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், ஈரோடு மாவட்டம் பவானி சாகர், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல், கணபதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்.
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2102667